உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரிடம் தவ்ஹித் ஜமாத் வலியுறுத்தல்

முதல்வரிடம் தவ்ஹித் ஜமாத் வலியுறுத்தல்

சென்னை:'மேற்கு வங்க மாநிலத்தை பின்பற்றி, தமிழகத்தில் புதிய வக்ப் சட்டம் அமல்படுத்தப்படாது' என அறிவிக்குமாறு, முதல்வர் ஸ்டாலினிடம் தவ்ஹித் ஜமாத் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.தமிழக தவ்ஹித் ஜமாத் கட்சி தலைவர் அப்துல் கரீம், துணை தலைவர் தாவூத் கைஸர், செயலர் அன்சாரி உள்ளிட்டோர், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். துணை முதல்வர் உதயநிதி உடன் இருந்தார். சந்திப்புக்கு பின், தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள் கூறியதாவது:இஸ்லாமிய மக்களின் நலனுக்காக, வக்ப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதாக கூறி, பா.ஜ., அரசு சதி திட்டத்தை அரங்கேற்றி உள்ளது. இதனால், இஸ்லாமியர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில் இஸ்லாமியருக்கு, 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில், 7 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தினோம். வக்ப் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதேபோல, முதல்வர் ஸ்டாலினும் அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் புதிய வக்ப் சட்டத்தை எதிர்த்து, நாளை கவர்னர் மாளிகையில் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ