உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓவிய ஆசிரியர் குத்திக்கொலை: மூவரிடம் போலீஸ் விசாரணை

ஓவிய ஆசிரியர் குத்திக்கொலை: மூவரிடம் போலீஸ் விசாரணை

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, ஓவிய ஆசிரியரை குத்தி கொலை செய்த வழக்கில், மூவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியலுார் மாவட்டம், பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி, 50, இவர், கல்லகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் பெரம்பலுார் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள உறவினர் ராதாகிருஷ்ணன், 56, என்பவரது வீட்டுக்கு வந்தார். அன்று மாலை, 6:30 மணியளவில், ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். குன்னம் போலீசார் புகழேந்தி சடலத்தை மீட்டு, சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !