உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஜாமின் மறுப்பு

குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஜாமின் மறுப்பு

ஆமதாபாத் : ஆமதாபாத்தில், 2008 ஜூலை 26ல், தொடர் குண்டுகள் வெடித்ததில், 57 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய உம்மர் கபீரா, நவீத் காத்ரி, சலீம் சிப்பாய், ஹாசிப் ரசா ஆகிய நான்கு பேர் ஜாமின் கோரி சிறப்பு கோர்ட்டில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி பி.ஜெ.தந்தா விசாரித்தார். 'குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய அப்துஸ் சுபான்தாகீருக்கு அடைக்கலம் தந்ததை தவிர, நான் வேற தவறு செய்யவில்லை'என, ஹாசிப் ரசா என்பவர் தனது ஜாமின் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவரது மனுவை பரிசீலித்து, ஜாமின் வழங்குவதாக நீதிபதி குறிப்பிட்டார். மற்ற 4 பேரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை