போதை ஊழியர் ஓட்டிய கார் மோதி மூவர் காயம்
திருச்சி : திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வருபவர் முருகன், 35. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு தன் காரில், நண்பருடன், சீனிவாசன் நகர் பகுதியில் சென்றுள்ளார். முருகன் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது, எதிரே வந்த பைக் மீது மோதி, காரில் சிக்கி பைக் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் பைக்கில் வந்த சிக்கந்தர், 38, அவரது மனைவி ரசியா பானு, 36, மகள் உமைரா, 15, ஆகியோர் காயம்அடைந்தனர். இவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.