உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையில் வந்த புலி பயணியர் அச்சம்

சாலையில் வந்த புலி பயணியர் அச்சம்

கூடலூர்: முதுமலை சாலையில் இரவில் புலி கடந்து சென்றதை பார்த்த சுற்றுலா பயணியர் பீதி அடைந்தனர். நேற்று முன்தினம், இரவு, முதுமலை சாலையில், புலி ஒன்று சாலையை கடந்து சென்றது. அவ்வழியாக வாகனத்தில் வந்த சுற்றுலா பயணியர், பீதியுடன் பார்த்து சென்றனர். இதை வீடியோவாக எடுத்த, சுற்றுலா பயணி ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.இதையடுத்து, இரவு நேரங்களில், இரு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ