உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டாய கல்விமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம்: சத்குரு

கட்டாய கல்விமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம்: சத்குரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நமது நாட்டிற்கும், குழந்தைகளுக்கும் சேவை செய்யும் வகையில் கட்டாய கல்வி முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என சத்குரு கூறியுள்ளார்.அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கோடு, கல்வி உரிமை சட்டம் 2009ல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, குறைந்தபட்சம் துவக்க கல்வி கிடைக்கும் வகையில், எட்டாம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் பாஸ் ஆக்கும் நடைமுறை 2019ல் உருவாக்கப்பட்டது.ஆனால், 16 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தை கைவிட்டன. பள்ளிகளில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் நடைமுறையை, இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடைப்பிடித்து வருகின்றன.ஆனால், மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில், அனைவருக்கும் பாஸ் திட்டமே நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், இந்த கொள்கையில் மத்திய அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது. அனைவரையும் பாஸ் ஆக்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்கும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் அதே வகுப்பில் தொடர வேண்டும். அதே நேரத்தில், இரண்டு மாதங்களுக்குள் அவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு தரப்பட வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள் தொடர்ந்து அதே வகுப்பிலேயே தொடர வேண்டும் என அந்த அரசாணையில் கூறப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தில் ஆல் பாஸ் முறையே தொடரும் எனக்கூறி இருந்தது.இந்நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பள்ளிகளில் இருந்து குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்கும் நல்ல நோக்கில், 'ஆல் பாஸ்' கொள்கை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கான பேர், உண்மையான கல்வி கற்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டதால், பாரம்பரிய தொழில்களான வேளாண்மை, தச்சு வேலை, பட்டறை வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்; படித்தவர்களுக்கான வேலைகளுக்கும் அவர்கள் தகுதி பெறவில்லை. எனவே, நாட்டுக்கும், குழந்தைகளுக்கும் பயன் தரக்கூடிய வகையில், கட்டாயக் கல்வி என்ற சிந்தனையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. இவ்வாறு அந்த அறிக்கையில் சத்குரு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sureshkumar
டிச 26, 2024 16:36

முற்றிலும் உண்மை தயவு செய்து இளைய தலைமுறை நல்ல அறிவார்ந்த சமுதாயமாக மாற இவர் சொல்வது போல் செயல்படுத்த வேண்டியது மிக அவசியம் விழிப்புடன் இருப்போம் தமிழகம் காப்போம்


Sureshkumar
டிச 26, 2024 16:34

இவர் சொல்வது முற்றிலும் உண்மை எப்படி என்றால் என் மகனே மிகப்பெரிய உதாரணம் ஆல் பாஸ் முறையில் 9ம் வகுப்பு வரை கடந்து விட்டான் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை இதைவிட கொடுமை என்னவென்றால் தமிழில் எழுத படிக்க தடுமாற்றம் மிகவும் வருத்தமாக உள்ளது இன்றைய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நிலை மோசமாகி விட்டது


மண்ணாந்தை
டிச 26, 2024 10:14

அரசும் சரி ஆன்மீகமும் சரி அது பற்றி எதுவும் தெரியாத சந்தர்ப்பவாத மனிதர்களிடம் சிக்கி சீரழிகிறது. குறைகள் கண்டறியப் பட்டால் அவற்றை களைய வேண்டுமே தவிர முடிவுகளை மாற்றக் கூடாது.


ArulMoorthy Marappan
டிச 26, 2024 09:04

படிப்பு வெறும் நடிப்பாகி விட்டது. எந்த திறமையும் இல்லாமல் பள்ளி, கல்லூரிகளை விட்டு மாணவர்கள் வெளியே வருகிறார்கள். அதன் பின் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பும் நிலை. சத்குரு சொல்வது, தகுதி இல்லாதவர்களை நிறுத்தி வைக்கும் முறை. இது சரியானதே


ஜெய்ஹிந்த்புரம்
டிச 25, 2024 23:40

எல்லாருக்கும் ....


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 25, 2024 22:01

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை இல்லை ஒத்துக்கொள் என்று ஒரு பழமொழி உண்டு. தற்கால பள்ளி கல்வி முறையில் 10, +2 பெயில் ஆன அல்லது குறைந்த மதிப்பில் பாஸ் ஆன மாணவர்கள் பெரும்பாலும் மேலும் படிப்பை தொடர்வதில்லை. அப்போது அவர்களுக்கு 15-17 வயது ஆகியிருக்கும். குடும்ப/குலத்தொழிலும் கற்றுக்கொள்ளாமல், படிப்பறிவும் இல்லாமல் வெறும் கூலி வேலைக்கு செல்லத்தொடங்குகிறார்கள். 5, 8 ம் வகுப்பில் தோல்வியுற்று அதே வகுப்பில் தொடர்ந்தாலும் கொஞ்சம் கஷ்டம்தான். அவர்களைவிட இளம்வயது மாணவர்களுக்கு நடுவே அவமானத்துடனும் அதேசமயம் ஒரு தாதாவாகவும் அவர்கள் உருவாகக்கூடும். விவசாயம், தச்சுவேலை போன்ற என்றும் கைகொடுக்கும் தொழில் அறிவும் இல்லாமல் போகிறது. கல்வித்துறையில் மாற்றம் தேவை. இங்கு இன்னொரு விஷயமும் முக்கியம். நிலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்த மாணவர்கள் விவசாயப் பட்டப் படிப்பில் சேர்ந்தால் பயனுண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் விவசாய நிலமற்றவர்கள் விவசாய பட்டப்படிப்பில் சேர்கிறார்கள். இவர்களிடம் நிலம் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இவர்கள் எதற்கு படிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம். ஆட்டு மந்தை போல என்ஜினீயரிங் படித்து வெளிவரும் பெரும்பாலான மாணவர்கள் சம்பந்தமே இல்லாமல் டெலிவரி பாய்களாக, திரிவர்களாக, விற்பனைப் பிரதிநிதிகளாக, கூலி வேலை செய்பவர்களாக, சமூக விரோதிகளாக, பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பாரமாக, எதிர்காலத்தில் நம்பிக்கையின்றி தடம் மாறி செல்கிறார்கள். ஏற்கெனவே நிலைமை கைமீறி போய்கொண்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அரசியல் கடந்து நாட்டு நலனுக்காக யோசிக்க வேண்டும்.


Senthil
டிச 26, 2024 10:05

சொந்தமாக விவசாய நிலம் உள்ளவர்கள்தான் விவசாயப் படிப்பு படிக்க வேண்டும் என்பது அபத்தமாக இல்லையா? அப்படியானால், சொந்தமாக மருத்துவமணை உள்ளவர்கள்தான் டாக்டருக்குப் படிக்க வேண்டுமா? என்ன சிந்தனை இது? யாரையும் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. படிக்கட்டும், படிப்புக்கு ஏத்த வேலை கிடைத்தால் பார்க்கட்டும் இல்லை என்றால் கிடைத்த வேலையை பார்க்கட்டும், இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?


Tamil Inban
டிச 25, 2024 21:44

இவr உளி எடுத்துக்கிட்டு தச்சு வேலை பார்க்கவேண்டியதுதானே அடுத்தவன் இந்த வேலைதான் பார்க்கணும்னு சொல்ல இவர் யாரு


karthik
டிச 26, 2024 06:07

சாமி அவர் சொன்ன கருத்தை முழுதும் படித்துவிட்டு உங்க கருத்தை பதிவு பண்ணுங்க - எல்லோருக்கும் சரியான கல்வியும் எல்லா விதமான தொழிலையும் கவரும் வண்ணம் இருக்கும்படி கொள்கைகை இருந்தால் நம் குழந்தைகளுக்கும் நாட்டுக்கும் நல்லது.


Senthil
டிச 26, 2024 10:09

அவர்களிடம் உளியை தூக்கி கொடுங்கள்.


பாலா
டிச 25, 2024 20:58

உள்ளே இருக்க வேண்டியவனல்லாம் தமிழனுக்குச் சொல்லும் காலம் மிக விரைவில் முடிவுக்கு வரும்.


Bye Pass
டிச 25, 2024 20:57

அமெரிக்காவில் பத்தாவது படித்த மாணவர்களுக்கு ஓரளவு எலெக்ட்ரிசின் வேலை ..மேக்கானிக் வேலை மற்றும் ஆட்டோமொபைல் ரிப்பேர் தெரிந்திருக்கும்


ஆரூர் ரங்
டிச 25, 2024 20:57

எது பரவாயில்லை? அரசு செலவில் காகித பட்டம் வாங்கி வெட்டியாக சுற்றுவதா? அரசின் கட்டாயப் படிப்பு சரியாக வரவில்லை என்றால் சீக்கிரமே சுய கைத்தொழிலைக்கற்று குடும்பத்துக்கு பாரமாக இல்லாத வாழ்க்கையா? பெரும்பாலான தொழிலதிபர்கள் இரண்டாம் வகையாக இருந்து முன்னேறியவர்கள்தான். ஆனால் எல்லோருக்கும் அரசு வேலை என்பது வாக்காளர்களை ஏமாற்று வேலை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை