உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம்: அண்ணாமலை

தி.மு.க.,வுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம்: அண்ணாமலை

சென்னை: ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளதால், மக்கள் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களின் திறமையின்மையால் மக்கள் அவதிப்படக்கூடாது'', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக இந்தியா டுடே ஆங்கில ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: சமீபத்தில் தி.மு.க., அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீண்டும் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது. இதில், தொலைநோக்கு பார்வை இல்லாததுடன், பட்ஜெட் ஆவணங்களை வாசிப்பது போல் அல்லாமல், தேர்தல் அறிக்கை போல் வாசிக்கப்பட்டது.தமிழகத்தின் கடன் சுமை குறைக்கப்படும் என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இதற்காக, சில பொருளாதார நிபுணர்களை ஒருங்கிணைத்த போதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை இரண்டு மடங்காக ஆகி உள்ளது. கடந்த 2021 ஜூன் மாதம் தமிழகத்தின் முன்னாள் நிதியமைச்சர், வட்டி சுமையை குறைப்பதற்காக கடனை மறுசீரமைப்பது குறித்து பேசியிருந்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்களின் வாக்குறுதி வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளது.தற்போது தி.மு.க., அரசு தனது நிர்வாக சீர்குலைவை மறைப்பதற்காக, மாநிலத்தை மற்றொரு மாநிலத்தோடு தான் ஒப்பிட வேண்டும் என்பதை அறியாமல், மாநிலத்தில் மொத்த கடனை, நாட்டின் கடனுடன் ஒப்பிட்டு பேசி வருகிறது.தமிழக அரசின் வருமானத்தின் பெரும்பகுதி டாஸ்மாக்கில் மது விற்பனை மூலம் மட்டுமே வருகிறது. அங்கிருந்து அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. அதற்கு மாறாக, மது விற்பனை மூலம் வருமானம் ஈட்டாத குஜராத் அரசு, ரூ.19,696 கோடி உபரி வருமானத்துடன் பட்ஜெட் தாக்கல் செய்தது. ஆனால், தமிழக அரசு ரூ.46,467 கோடி நிதிப்பற்றாக்குறையுடன் பட்ஜெட் தாக்கல் செய்தது.மூலதன உள்கட்டமைப்புக்காக குஜராத் அரசு ரூ.95,472 கோடி செலவு செய்கிறது. தமிழக அரசு, இதற்கு குறைவாக ரூ.57,231 கோடி மட்டுமே செலவு செய்கிறது. அதேநேரத்தில் குஜராத் மாநிலத்தின் கடன் ரூ.3.7 லட்சம் கோடியாக இருக்கும்போது, தமிழகத்தின் கடன் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.9.62 லட்சம் கோடியாக உள்ளது. மூலதன உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக குஜராத் கடன் தொகையை பயன்படுத்தும் நிலையில், தமிழகமானது, வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கவும், கடன் மற்றும் வட்டி கட்ட செலவு செய்து வருகிறது.தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆன பிறகும், பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. தேர்தலின் போது அளித்த பல வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தது முதல், விளம்பரத்திற்காக மட்டும் செலவு செய்கிறது. தங்களது தோல்வியை மறைக்க, விளம்பரத்திற்காக அதிக பணம் செலவு செய்கிறது. 2023-24 ல் விளம்பரத்திற்காக தமிழக அரசு ரூ.35 கோடி செலவு செய்துள்ளது. இது 2024-25ல் ரூ.110 கோடி ஆக அதிகரித்தது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்காக விளம்பரத்திற்கான செலவு 2023-24ல் ரூ.1,65 கோடியில் இருந்து 2025- 26ல் ரூ.11.48 கோடியாக அதிகரித்து உள்ளது. ஆனால், பட்ஜெட்டில், ஆதிதிராவிடர் விடுதிகளை மேம்படுத்துவதற்கான செலவு ரூ.55 கோடியில் இருந்து 20 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கான சிறப்பு திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.134 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.30.5 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல், இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் எண்ணற்ற திட்டங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளர்ச்சி திட்டம், மின்சாரத்தில் இயங்கும் பஸ்கள் திட்டத்திற்கு ஒதுக்கப்படவில்லை. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் கீழ் 3,500 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் ரூ.1000 கோடி மட்டும் ஒதுக்கப்படுகிறது. முதல்வர் கிராம சாலை திட்டத்திற்கு கீழ் ரூ.2,200 கோடி தேவைப்படும் நிலையில் ரூ.1,644 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.8,876 கோடி மட்டும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4,400 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் விவசாய பரப்பளவு 4 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டிலும் நிறைவேற்றப்படவில்லை.கடந்த ஆண்டு விவசாய பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினோம். ஆனால், அதனை மறுத்த தி.மு.க., அரசு, விவசாயக்கடன் முழுமையாக ரத்து செய்ததாக கூறியது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரத்துக்காக ரூ.1,774 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக மக்களை தி.மு.க., அரசு எப்படியெல்லாம் தவறாக வழிநடத்துகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளதால், மக்கள் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களின் திறமையின்மையால் மக்கள் அவதிபடக்கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

அ.சகாயராசு
மார் 23, 2025 10:11

எந்த காலத்திலும் பாஜக தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது.


Bala
மார் 22, 2025 14:43

GET OUT DRAAVIDA MODAL


VENKATASUBRAMANIAN
மார் 22, 2025 07:43

வீரவசனம் பேசி திமுக மக்களை ஏமாற்றி வந்தது. இனிமேல் மக்கள் நமப மாட்டார்கள். 200உபிஸ் மட்டுமே இது கருத்து கூறுவார்கள். மேலும் இவர்களது பிள்ளைகளுக்கு சேர்த்துதான் அண்ணாமலை பேசுகிறார். இது கூட புரியாத தவர்கள்


pmsamy
மார் 22, 2025 07:00

நீங்க யாருண்ணு சொல்லிட்டு அதுக்கப்புறம் திமுக பத்தி பேசுங்க


Bala
மார் 22, 2025 14:31

செந்தில் பாலாஜியை கேளு. சிங்கம் அண்ணாமலை யார் என்று சொல்வார். அண்ணாமலை என்ற பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல ???


கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 22, 2025 04:54

திமுகவுக்கு விடை கொடுத்து, யாரு கிட்ட தமிழ் நாட்டை கொடுக்க சொல்ற. பிஜேபி இந்தியா முழுவதும் கெடுத்தது போதாதா. நீயெல்லாம் காம்பெடிசன்லயே இல்ல.


Bala
மார் 22, 2025 14:33

திமுகவிற்கு மரியாதையாக விடையெல்லாம் கொடுக்க மாட்டோம். 2026 தேர்தலில் திமுகவிற்கு மரண அடிதான் கொடுப்போம்


தாமரை மலர்கிறது
மார் 22, 2025 04:07

திமுக அணையபோகும் நேரத்தில் பிரகாசமாக எரியும் விளக்கு . நிரந்தர விடை தமிழர்கள் கொடுக்கபோகிறார்கள்.


மதிவதனன்
மார் 21, 2025 21:48

ஓசி சோறு ஜெயா வே தண்ணிகுடி ச்சி பார்த்தா கடைசியில் அவரையே ஜெயிலுக்கு அனுப்பிய கூட்டம் ,ADMK , VOOTU DMK விட அதிகம் ,ஆனா நீ நோட்டா வோடு போட்டி போடும் சிறு கருவண்டு ,பஞ்ச் DIALOGE விடலாம் அதற்கு முன்னர் நீ பிறந்து வளர்ந்த தெரு அந்த தெரு வார்டு மெம்பெர் ஆகி காட்டு நீ வீரன் என்று ஒத்துக்கொள்ளலாம் , வார் ரூம் வெச்சி மாதம் 6000 கொடுத்து கூட்டம் கூடலாம் ஆனா ஓட்டு இல்லியாய் இருந்திருந்தால் சிறையில் இல் இருந்தே ஒருத்தன் உன்னை 130000 வாகு வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பானா , வக்கீலை என்று ராஜாய சபா MP ஆகி முருகன் மாதிரி சொத்து சேர்க்க பாரு


மலை நேசன்
மார் 21, 2025 23:17

அப்புரம் ஏம்பா அவரை போராட விடமா கைது பண்றீங்க? கடுஞ்சொற்களாள் ஒருவரை திட்டுவது அவரின் மீதுள்ள பயம் திராவிட மாயை ஒழியும்.


பேசும் தமிழன்
மார் 22, 2025 08:16

உங்கள் கருத்தே நீங்கள் எல்லாம் அண்ணாமலை மற்றும் பிஜெபி பெயரை கேட்டாலே பேதியாகி போய் கிடக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது..... உங்களுக்கு தமிழக மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டார்கள்.


Bala
மார் 22, 2025 14:38

இப்பல்லாம் அண்ணாமலை அவர்கள் ரோட்டுக்கு வந்தாலே திமுகவுக்கு கிடுகிடுக்குது. பயந்து நடுநடுங்கி திமுக IT அடிமைகள் மீடியா அண்ணாமலைக்கு எதிரா ஏவிவிடுதுங்க. தலைகீழ் நின்னு தண்ணிகுடிச்சாலும். தமிழகத்தின் வருங்காலம் திரு அண்ணாமலை அவர்களுக்குத்தான். 2026 லேயே அண்ணாமலை அவர்களை தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் ஏத்தாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.


Ravi
மார் 21, 2025 21:21

Mr.Annamalai should have spelled out the name of “YAR ANTHA SIR” as he mentioned that he knows the person. Why he is playing hide and seek game with people. How we can trust who doesn’t reveal the culprit name. I am confused as to whom I should vote for.


sridhar
மார் 21, 2025 21:17

Not for us these scholarly articles. How much will you give per vote . That decides the outcome.


பல்லவி
மார் 21, 2025 20:57

நோட்டாவை ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தலைவர்


பேசும் தமிழன்
மார் 21, 2025 21:21

இப்படியே எதையாவது சொல்லி..... மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.... அண்ணாமலை பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல !!!


Raman
மார் 21, 2025 21:42

Rs 200 jittery


Venkatesh
மார் 21, 2025 21:50

உள்ளுக்குள் உதறல்... வெளியே ஊ₹பி விசுவாசம்.... வாங்குற காசுக்கு மேல வேலை செய்யும் ஊ₹பிக்கள்.... கடைசி வரை காலை பிடித்து பிழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் ... வீம்புக்காக ஏதாவது சொல்லி ஆற்றல் தேடிக்கொண்டு தோழமை நொட்டும் இடத்தில் ஊ₹பிக்கள்


மதிவதனன்
மார் 21, 2025 21:55

130000 வோட்டில் தோற்றபோது சும்மா அதிரது இல்லை வக்கற்றவன் சிறையில் இல் இருந்தே ஒருத்தன் தோற்கடிக்கிறான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை