உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருத்தகிரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்

விருத்தகிரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 1ம் தேதி விருத்தாம்பிகை அம்மன் தேரில் பவனி வந்தார். அதனையடுத்து மலர் அலங்காரத்தில் அம்மன் அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று இரவு அம்மன் படிகபல்லக்கில் ஊர்வலம் நடந்தது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் இன்று நடந்தது. இதில் திருமாங்கல்ய அபிஷேக, ஆராதனைகள் நடந்து சிவாச்சாரியார் கள் வேத மந்திரங்கள் முழங்க விருத்தாம்பிகை அம்மனுக்கு திருக்கல்யானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ