உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 101வது பிறந்தநாளை கொண்டாடிய திருப்பூர் மூதாட்டி: 7 தலைமுறை உறவுகளுடன் உற்சாக சந்திப்பு

101வது பிறந்தநாளை கொண்டாடிய திருப்பூர் மூதாட்டி: 7 தலைமுறை உறவுகளுடன் உற்சாக சந்திப்பு

திருப்பூர்: திருப்பூரில், ஏழு தலைமுறை வாரிசுகளுடன், 101 வது பிறந்த நாளை மூதாட்டி குடும்பத்தினருடன் கொண்டாடினர்.திருப்பூர் ஜீவா காலனியை சேர்ந்தவர் ராமாத்தாள், 100. இவர், 101 வது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டிக்கும், குடும்பத்தினர் சார்பில், பிறந்த நாள் விழா இன்று( நவ.,09) கொண்டாடப்பட்டது. இதற்காக ராமாத்தாளின் மகன், மகள் வழி பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்தி மற்றும் தனது தங்கை வழி குடும்பத்தினர், உறவினர்கள் என, ஏழு தலைமுறைகளை, நுாறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். 101 வயதான ராமாத்தாள் பிரம்மாண்ட கேக் வெட்டி பகிர்ந்தார். குடும்பத்தினர் ராமாத்தாளின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆடல் , பாடல் என உறவினர்கள் மகிழ்ந்து மூதாட்டி ராமாத்தாளையும் மகிழ்ச்சியடைய செய்தனர். தொடர்ந்து, மூதாட்டியுடன் குழு போட்டோ எடுத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=18v0tlap&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து மூதாட்டி கூறியதாவது: ஏழு தலைமுறைகளை கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தருணத்தில், அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பது போல, எப்போதும் ஒற்றுமையுடனும், உடல் நலத்தோடு, ஆரோக்கியமாக வாழ வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ