உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து தொழுகை; திருப்பூரில் போதை வாலிபர் அட்டூழியம்

கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து தொழுகை; திருப்பூரில் போதை வாலிபர் அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் அருகே முஸ்லிம் வாலிபர் ஒருவர் போதையில் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து தொழுகை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மங்கலம் ரோடு செங்குந்தபுரம் பகுதியில் ராஜகணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே அஜ்மல் கான்,21, என்ற முஸ்லிம் வாலிபர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், அந்த வாலிபர் நிதானம் இழக்கும் அளவுக்கு மது அருந்தி விட்டு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த ராஜகணபதி கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த அஜ்மல் கான், போதையில் கோவிலின் உள்ளே அமர்ந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s6b1xei3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை கண்ட கோவில் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அஜ்மல் கானை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதனை கேட்க மறுத்து, அங்கிருந்தவர்களை மிரட்டியதுடன், தொடர்ந்து தொழுகை நடத்தினார். அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Padmasridharan
அக் 28, 2025 20:07

போதை இரு மதத்தையும் இணைத்து இருக்கின்றது சாமியோவ்..


kumarkv
அக் 28, 2025 16:36

இல்லாத தெய்வத்தை விட்டுவிட்டு உண்மையான தெய்வம் இருக்கிற இடத்திற்கு வந்து தனுக்கு தெறிந்ததை சோல்கிறான்.


M.A.சலீம் பாவா மலேசியா
அக் 28, 2025 10:11

இஸ்லாமிய பெயர் தவிர அவர் முஸ்லிமா இல்லையா என்பது இங்கு கருத்து பதிவு செய்யும் நம்மில் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அவர் செய்த செயல் தவறு. தண்டனை வழங்கியே ஆகவேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அவர் இஸ்லாமியர் வணங்குவது போல் தொழுகை நடத்தவில்லை... வாயில் வரும் வார்த்தைகளை உளறி கொண்டுள்ளார். பள்ளிகளில் தொழுகை எவ்வாறு செய்வார்கள் என்பதை அறிந்தவர்களுக்கு புரியும். அனைத்து வணகஸ்தலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது கடும் தண்டனைக்குரிய குற்றமாக கருதி தாண்டிக்க வேண்டும்.


Ramesh Sargam
அக் 28, 2025 08:20

கோவிலுக்கு அருகில், உள்ளே இருந்த ஒரு ஹிந்துவுக்கும் தைரியம் இல்லையா அடித்து துரத்த. இன்னும் எத்தனை நாள்தான் ஹிந்துக்கள் அவனை இறைவன் தண்டிப்பான் என்று கூறி தங்கள் கடமையிலிருந்து தப்பிப்பார்கள் நம் ஹிந்துக்கள்.


Raj
அக் 28, 2025 05:06

இந்த வாலிபரை இந்தக் குற்றம் செய்யக் காரணமாக இருந்த டாஸ்மாக் கடைகள் அதனை அனுமதித்த அரசு இப்படி அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டி இருக்கும். அதனால் தான் இவரை கைது செய்ய மறுக்கிறார்கள். வேற்று மதத்தவர்கள் கோவில்களுக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தால் சுய புத்தியோடு போதையில் இல்லாமல் இருக்கும் போது யார் வணங்கும் தெய்வமாக இருந்தாலும் மரியாதையாக அணுக வேண்டும் என்று உள்ளே வந்தால் குற்றமில்லை. ஆனால் போதையில் இருக்கும் போது அவர் வணங்கும் பள்ளிவாசலுக்குள் சென்றாலும் அதைக் குற்றமாகவே கருத வேண்டும். வழிபாட்டுத் தலங்களுக்கு என்று உள்ள புனிதத்துவத்தை இது போன்ற குடிகாரர்களை சிறையில் அடைத்தாவது உணர வைக்க வேண்டும்.


Siva Balan
அக் 27, 2025 21:36

தமிழ்நாட்டு மக்கள் அடிமைகளாக இருக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும்.


Modisha
அக் 27, 2025 20:40

ஒருவேளை ‘ இது வரையில் தவறான பாதையில் போய் விட்டேன் , என்னை மன்னிச்சி ஏற்றுக்கொள் பிள்ளையாரே ‘ என்று அழுதிருப்பானோ .


பேசும் தமிழன்
அக் 27, 2025 20:23

கைது செய்யவில்லை.... விசாரித்து வருகிறார்கள்... விடியாத அரசின் காவல்துறை..... விளங்கும்.


S.kausalya
அக் 27, 2025 20:01

போதையில் இருப்பவர் தொழுகை செய்யலாமா? இஸ்லாம் அனுமதிக்கிறார் களா


தலைவன்
அக் 28, 2025 14:19

இல்லை. மது ,மாது ,சூது ,ஜோஸ்யம் ,வட்டி, தீவிரவாத உயிர்க்கொலை இவையனைத்துமே விலக்க பட்டது


montelukast sodium
அக் 27, 2025 19:14

இதில் என்ன தவறு இருக்கிறது அனைத்து தெய்வமே ஒன்றே அவர் குளித்துவிட்டு வருவதற்கு பதிலாக குடித்துவிட்டு வந்து விட்டார்