உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் முனையமாக மாறுகிறது திருவண்ணாமலை ஸ்டேஷன்

ரயில் முனையமாக மாறுகிறது திருவண்ணாமலை ஸ்டேஷன்

சென்னை:திருவண்ணாமலை ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில் நகரம் திருவண்ணாமலை. அங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பவுர்ணமி கிரிவலத்தில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். எனவே, 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.இதன்படி, 7.86 கோடி ரூபாய் செலவில், இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களை இயக்கவும், ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தவும் பணிகள் நடந்து வருகின்றன.மேலும், இந்த நிலையத்தை முனையமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளோம். உரிய ஒப்புதலை பெற்று, ரயில்வே முனையமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ரயில் நிலையம் முனையமாக மாறினால், இங்கிருந்து பிற நகரங்கள், மாநிலங்களுக்கும் ரயில்களை இயக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Vijay Varadharajan
ஜூலை 13, 2025 13:15

அதெல்லாம் ஏற்கெனவே இரண்டு இருக்கிறது சார். திருவண்ணாமலை - கச்சிகுடா வரை செல்லும் செல்லும் ரயில் ஞாயிற்றுக் கிழமையிலும், ஹைதரபாத் டெக்கான் நம்பள்ளி வரை செல்லும் ரயில் வெள்ளி கிழமையிலும் செல்லும்.


Thiru Moorthi S
ஜூலை 08, 2025 09:24

தாம்பரம் வந்தவாசி திருவண்ணாமலை அரூர் பாதையெ முடிக்க வேண்டும் ...சேலம் கேரளா வண்டிகள் அதன் வழியாக இயக்க வேண்டும்...... திருவள்ளுவர் காஞ்சிபுரம் வழியாக மட்டும் ரயில் செல்வது ...


Gandhi G
ஜூலை 08, 2025 09:01

Hyderabad டு திருவண்ணாமலை ரயில் வேண்டும்


Hariharan San
ஜூலை 07, 2025 23:09

திருவண்ணாமலை மாவட்டம் , ஆரணி வட்டத்தில் ரயில் நிலையங்கள் கிடையாது என்பது உண்மை ... அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... ஆரணியில் நிறைய சிறு மற்றும் குறு நில வணிகம் கொண்ட நகரம் ஆகையால் ரயில் வந்தால் நன்றாக இருக்கும் இந்திரா காந்தி காலத்தில் ரயில் வர வேண்டியது ஆனால் வராமல் போனது ஆகையால் ரயில் நிலையம் வேண்டும் ...


karthi keyan
ஜூலை 06, 2025 13:31

அப்படியே சென்னைலிருந்து திருச்சிக்கு பகல் நேர முன்பதிவில்லா விரைவு ரெயில், காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக பயணிகள் ரயில் இயக்குமாறு கேட்கிறோம்


suresh j
ஜூலை 06, 2025 10:39

அப்படியே திருவண்ணாமலை டு செங்கல்பட்டு வழி வந்தவாசி பாதை அமைத்தால் நல்லா இருக்கும் அந்த பகுதி மக்கள் எல்லாம் ரொம்ப சிரமப்படுகிறார்கள்


suresh j
ஜூலை 06, 2025 10:34

திருவண்ணாமலை இருந்து வந்தவாசி வழியா, காஞ்சிபுரம் ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் பாதை அமைத்த நல்லா இருக்கும்


Kalai Magal
ஜூலை 05, 2025 23:42

சூப்பர் நல்ல முடிவு


Sakthi Vel
ஜூலை 05, 2025 21:07

ஓகே ஓகே


Rathinam Karthikeyan
ஜூலை 05, 2025 20:55

பிராட்கேஜ் மாறும் பொழுது நிறுத்தப்பட்ட எக்மோர்-திருவண்ணாமலை ரயிலை மீண்டும் இயக்க முதலில் நடவடிக்கை எடுங்கள்.


சமீபத்திய செய்தி