| ADDED : மார் 14, 2024 06:04 AM
நாகர்கோவில்: ''தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியை மிஞ்சும் அளவுக்கு பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக அமையும்''என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரியில் பந்தல் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். நாளை கன்னியாகுமரியிலும், மார்ச் 18 ல் சேலத்திலும், மார்ச் 19-ல் கோவையிலும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.மோடியின் ஆளுமையை ஏற்று மூன்றாவது முறையாக அவர் பிரதமர் ஆக வேண்டும் என ஆதரவு தெரிவித்து பா.ஜ.,வுடன் சமத்துவ மக்கள் கட்சி இணைந்ததை வரவேற்கிறோம். மற்றவர்களையும் வரவேற்கிறாம். தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியை மிஞ்சுமளவு பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக அமையும். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பா.ஜ., அரசு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். எனவே தேர்தலில் நாங்கள் 'மீண்டும் மோடி' கோஷத்தை முன்னெடுத்துள்ளோம்.விளவங்கோடு சட்டசபை தொகுதியில் விஜயதரணி மீண்டும் போட்டியிடுவது பற்றி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சி தலைமை முடிவு செய்யும் என்றார்.