உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு இயந்திர செயல்பாட்டைச் சீரழிப்பது தான் "நாடு போற்றும் நல்லாட்சியா"; தமிழக அரசை விளாசிய நயினார்

அரசு இயந்திர செயல்பாட்டைச் சீரழிப்பது தான் "நாடு போற்றும் நல்லாட்சியா"; தமிழக அரசை விளாசிய நயினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு ஊழியர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளி அரசு இயந்திரத்தின் செயல்பாட்டைச் சீரழிப்பது தான் 'நாடு போற்றும் நல்லாட்சியின்' அங்கமா என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; தோட்டக்கலைத்துறையை நீர்த்துப்போகச் செய்வதோடு, சிறு குறு விவசாயிகளுக்குச் சரியான நிபுணத்துவ சேவையும் கிடைக்க முடியாத வகையில், உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தைக் கொண்டுவர திமுக அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.பல்வேறு குளறுபடிகள் மூலம் தோட்டக்கலைத்துறையில் ரூ. 141 கோடி ஊழல் செய்து சுரண்டித் தின்ற திமுக அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று தோட்டக்கலைத்துறையின் தனித்துவத்தை அழித்து, வேளாண்துறையின் ஒரு அங்கமாக மாற்றத் திட்டமிட்டு, ஒட்டு மொத்தமாகத் தோட்டக்கலைத்துறையை உருக்குலைக்க முடிவு செய்துள்ளது. மேலும், தோட்டக்கலை அலுவலர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது.தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என அனுதினமும் அரசு ஊழியர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளி அரசு இயந்திரத்தின் செயல்பாட்டைச் சீரழிப்பது தான் 'நாடு போற்றும் நல்லாட்சியின்' அங்கமா? ஆட்சி அதிகாரத் திமிரில் அரசு ஊழியர்களை அலட்சியம் செய்யும் திமுக தனது அகம்பாவத்தாலேயே வீழ்ச்சியடையும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Narasimhan
டிச 30, 2025 19:00

இவர் பேசுவது அனைத்தும் செயற்கையாக தெரிகிறது. ஈகோ ப்ரச்சனையால் NDA தோற்கப்போவது உறுதி.


என்றும் இந்தியன்
டிச 30, 2025 17:07

டாஸ்மாக்கினாட்டில் நல்லாட்சி தான் திமுக தலைமையில் நடக்கின்றது???எப்படி???ஆய்வு செய்யுங்கள்???நடப்பது தெலுங்கு ஆட்சி டாஸ்மாக்கினாட்டில். தெலுங்கில் நல்ல என்றால் கருப்பு என்று உண்மையான அர்த்தம் தெலுங்கு நல்ல ஆட்சி நடக்கின்றது???சரிதானே


அருண் பிரகாஷ் மதுரை
டிச 30, 2025 16:56

எனக்கு தெரிந்து போராடாத துறை என்றால் அது காவல் துறை மட்டும்தான் போல.. அவர்கள் போராட முடியாது.. அதனால் போராடவில்லை..தொழிலாளர் போராட்டம் என்றால் முதல் வரிசையில் நிற்கும் உண்டியல் குலுக்கிகள் இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..தேர்தல் பேரம் பேச காத்துக்கொண்டு இருக்கிறார்கள்..


சமீபத்திய செய்தி