உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழர் பெருமையை நிலை நிறுத்த கவர்னர் உறுதி!

தமிழர் பெருமையை நிலை நிறுத்த கவர்னர் உறுதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தேசியக் கீதத்தை அவமதித்ததால் சட்டசபையை விட்டு கவர்னர் வெளியேறியதாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று(ஜன.6) காலை 9.30க்கு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள தலைமைச் செயலகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் உரிய மரியாதை தரப்பட்டது. பின்னர் சபாநாயகர் அப்பாவு, கவர்னரை சட்டசபைக்குள் அழைத்துச் சென்றார். முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்ததால் கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார்.இதுகுறித்து கவர்னர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சட்டசபையில் இன்று மீண்டும் இந்திய அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் கடமை என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த விளக்க பதிவானது, சில நிமிடங்களில் கவர்னர் எக்ஸ் தள வலை பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறிக்கை எக்ஸ் தள பக்கத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; தமிழக கவர்னர் தமிழகத்தின் மொழி, கலாசாரம் மற்றும் மரபுகள் உள்ளிட்ட மாநிலத்தின் செழுமையான கலாசார பாரம்பரியத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர். தமிழ்த்தாய் வாழ்த்து என்ற தமிழ் மாநில பாடலுடைய புனிதத்தை எப்போதும் ஒவ்வொரு நிகழ்விலும் பயபக்தியுடன் அவர் பாடுகிறார். உலகின் பழமையான, புகழ்பெற்ற தமிழ் மொழியானது எண்ணற்ற இந்தியர்களின் இதயத்தில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அதை கவர்னர் முழு மனதுடன் பகிர்ந்து கொள்கிறார். மாநிலத்திற்கு உள்ளேயும், தேசிய தளத்திலேயும் தமிழ் கலாசாரத்தை, அதை மேம்படுததுவதற்கு ஒவ்வொரு வகையிலும் ஆதரவு அளித்து இருக்கிறார். அரசியலைமைப்புச் சட்டத்தை மதித்து, சட்ட கடமைகளை பின்பற்றுவது கவர்னரின் கடமை. தேசிய கீதத்துக்கு மரியாதை தருவது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ள அடிப்படை கடமையாகும். பெருமைக்குரிய விஷயமும் கூட. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில சட்டசபையிலும் கவர்னர் உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. பலமுறை இதுபற்றிய நினைவூட்டல்களை முன்னரே தெரிவித்த பின்பும், அவை வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இன்று(ஜன.6) கவர்னர் உரை தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அல்லது இசைக்கப்படாமல் இருந்த போது கவர்னர், முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அது திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. கவர்னர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அல்லது இசைக்கப்படாமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். இதனால் அதிர்ச்சி அடைந்த கவர்னர் மாளிகையை விட்டு வெளியேறினார்.கவர்னர், அரசியலமைப்பு விழுமியங்களை நிலை நிறுத்துவதற்கும் தமிழரின் பெருமையை நிலைநிறுத்தி, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதத்துக்கான மரியாதையை மீட்டு எடுப்பதற்கும் தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.இவ்வாறு அற்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

venugopal s
ஜன 07, 2025 06:06

தமிழகத்தை விட்டுப் போனால் அதுவே தமிழகத்துக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்!


saravanan
ஜன 06, 2025 21:35

ஆளுநர் உரைக்கு முன்பும், பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன சட்டம் இருந்தும், இதைப்பற்றி நினைவூட்டல்களை ஆளுநர் முன்னரே பலமுறை அரசுக்கு தெரிவித்த பின்பும் வேண்டுமேன்றே தேசிய கீதம் பாடப்படுவதை தவிர்ப்பது முறையற்றது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது பன்னாட்டு விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது கூட போட்டிகளில் பங்கேற்கும் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் தொடந்தாற் போல் இசைக்கப்படுவது மரபு மனித நேயம் மற்றும் ஒருமைப்பாட்டின் வெளிப்பாடுகள் அவை. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இது போன்ற கண்ணியக் குறைவான சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஆள்பவர்கள் ஆட்சியின் அவலங்களையும், தோல்விகளையும் மறைக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்


Senthil
ஜன 06, 2025 20:59

ஏன் ஐயா, தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடுவது, எப்போதும் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்பும் இல்லாத தமிழ் மக்களுக்கு தேவையும் இல்லாத சமஷ்கிருதத்தை தூக்கிப்பிடிப்பது, இதுதான் தாங்கள் தமிழர் பெருமையை நிலைநிறுத்தும் லட்சணமா? தங்களுக்குத்தான் தமிழ் என்றாலே கசக்கிறதே, பிறகு என்ன க்கு தமிழ்நாட்டில் இருக்கிறீர்?


sankaranarayanan
ஜன 06, 2025 20:39

எல்லா மானிலங்களிலும் ஆளுநர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் வாசிக்கும்போது திராவிட ஆட்சியில் மட்டும் தமிழகத்தில் ஏன் இந்த திடீர் மாற்றம் இதற்கு உச்ச நீதி மன்றமே தலையிட்டு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இப்படியே ஒவ்வொரு மாநிலமும் தங்களது அவர்களது மொழி வாழ்த்துக்களை முதலில் பாடி பிறகு தேசிய கீதம் பாட ஆரம்பித்தால் நானு நாடாகவே இருக்காது யாரையுமே நாடமாட்டார்கள் பிரிவினை மனப்பாண்மையையே நோக்கி செல்லும்


தாமரை மலர்கிறது
ஜன 06, 2025 20:06

தமிழ்நாடு ஒன்றும் தனிநாடல்ல. மற்ற மாநிலங்களை பின்பற்றி தமிழ்நாடும் தேசியகீதத்தை முதலில் மற்றும் கடைசியில் பாட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை வேண்டுமெனில் இடையில் பாடிக்கொள்ளலாம். முதலில் பாடுவோம் என்றால், தமிழக அரசை கலைத்துவிடுவது தேசஒற்றுமைக்கு பயனளிக்கும். தீவிரவாதிகளுக்கு உணர்ச்சி ஓட்டுவது போன்ற செயல்களை ஒடுக்குவது நல்லது.


Senthil
ஜன 06, 2025 21:39

கலைத்துப் பாருங்களே, பார்க்கலாம். எங்கள் ஊரான இங்கு தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்படும், விழாவின் முடிவில் நேரம் இருந்தால் தேசியகீதம் பாடப்படும். தாமரை இங்கு ல் மலரும்.


karutthu kandhasamy
ஜன 06, 2025 20:04

ஒவொரு தடவையும் இது மாதிரி பிரச்னை வருகிறது இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் பிரதமர் மோடிஜி க்கு தெரியாதா ? அவர் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது எரிச்சலூட்டுகிறது .அமிடிஷா வும் இதுபற்றி மௌனமாக இருக்கிறார் .ஒன்று கவர்னரை மாற்றுங்கள் அல்லது தமிழக அரசை கண்டியுங்கள் அண்ணா பல்கலையில் பெண்களுக்கு பாலியல் பிரச்னை நடந்தது இது பற்றி மோடிஜி இதுவரை வாய்திறக்கவில்லை நிச்சயம் கவர்னர் ரிப்போர்ட் அனுப்பியிருப்பர் .ஒருவேளை மோடிஜி தமிழகத்தை தவிர்க்கிறாரோ என சந்தேகம் வருகிறது .இது இப்படியே நீடித்தால் தமிழகத்தில் பி ஜே பி க்கு ஒரு சீட் கூட கிடைக்காது


Senthil
ஜன 06, 2025 21:03

கவர்னரை மாற்றலாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை கண்டிக்க மத்திய அரசின் தலைவருக்கு தகுதியோ உரிமையோ கிடையாது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 19:42

கவர்னர் வந்து இறங்கியதும் police band குழு தேசிய கீதம் தான் வாசித்தார்கள். உரையை வாசிக்க இவருக்கு விருப்பம் இல்லை. அதுக்கு இது ஒரு நொண்டிச் சாக்கு. ஆனாலும் இந்த கவர்னரால் திமுக விற்கு தான் நல்லது. தொடரட்டும்.


R. SUKUMAR CHEZHIAN
ஜன 06, 2025 19:26

தமிழ் தாயை வணங்குபவர்கள் ஹிந்துகள் மட்டும் தான், இந்த திராவிட கும்பல்களுக்கு தில் இருந்தால் இஸ்லாமியர்களையும் கிருஸ்தவர்களையும் தமிழ் தாயை வணங்கு என உத்தரவிடுங்கள் பார்க்கலாம்.


Senthil
ஜன 06, 2025 21:46

தமிழ்த்தாயை வணங்குபவர்கள் ஹிந்துக்கள் இல்லை, தமிழர்கள் மட்டும்தான் தமிழ்த்தாயை வணங்குகிறோம். உபி, மபி யில் உள்ளவர்கள் தமிழ்த்தாயை வணங்குவதில்லை. ஹிந்துக்கள் என்று இந்த அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ராமனை அறியாத, அல்லாவை அறியாத, ஜீஸஸை அறியாத, முருகனை வணங்குகிற தமிழர்கள் நாங்கள்தான் தமிழ்த்தாயை வணங்குகிறோம், போற்றுகிறோம்.


S.Martin Manoj
ஜன 06, 2025 19:14

நீங்க நட்டமா நிருதினதெல்லாம் போதும்.


Dhurvesh
ஜன 06, 2025 19:02

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த ஆளுநர் ஆர் என் ரவி..இப்படிக்கூட தலைப்பை வைத்திருக்கலாமே..? ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதையை செலுத்தவேண்டும் ..... தான்தோன்றித்தனமாக செயல்படுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும்செயல் . அரசியல் வாதிபோல் நடந்துகொள்வது அழகல்ல..... அண்ணாமலையைப்போல் ராஜினாமாசெய்துவிட்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றலாம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை