மேலும் செய்திகள்
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
2 hour(s) ago
சென்னை: தமிழக சட்டசபை பிப்.,12ல் கவர்னர் உரையுடன் கூட உள்ளதாகவும், 19ல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை வரும் பிப்.,12 காலை 10:00 மணிக்கு கவர்னர் உரையுடன் கூட உள்ளது. 19ம் தேதி காலை 10:00 மணிக்கு தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.2024- 25ம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், பிப்.,20ம் தேதியும், கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பிப்.,21ம் தேதியும் சட்டசபையில் விவாதிக்கப்படும்.சட்டசபை சபாநாயகரை, நீதிமன்றம் கட்டுப்படுத்தாது. ஒரு எம்.எல்.ஏ.,வை எங்கு அமர வைக்க வேண்டும் என்ற முடிவு சபாநாயகரிடம் மட்டுமே உள்ளது. சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் நேரடி ஒளிபரப்பின் போது எதிர்க்கட்சிகளை காண்பிக்கவில்லை. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
2 hour(s) ago