ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பங்கள் அழிவதை வேடிக்கை பார்ப்பதா?
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, நாளுக்கு நாள் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு, அக்டோபர் 5 முதல் ஜனவரி 12 வரை 100 நாட்களுக்கு, 100 கோடி ரூபாய் பரிசுகள் வெல்லலாம் என்று ஆசை காட்டி, ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்து வருகிறது. இதன் விளைவு என்னவாக இருக்குமோ என்று, நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. இதனால், எத்தனை லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வரும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. ஆனால், இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசோ வேடிக்கைப் பார்க்கிறது. ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவது தான். தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல், நிலுவையில் உள்ள உச்ச நீதிமன்ற வழக்கை விரைவுப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற வேண்டும்.- ராமதாஸ்,பா.ம.க., நிறுவனர்.