உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை; நாளையும் கொட்டும் என எச்சரிக்கை

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை; நாளையும் கொட்டும் என எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று(அக்.,30) 8 மாவட்டங்களிலும், நாளை (அக்.,31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே சென்னையில் வெவ்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jfyespvq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல், தென்மேற்கு அரபிக் கடலின் மேல் என, இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று(அக்.,30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (அக்.,31)

மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் நாளை தீபாவளி நாளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சென்னையில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பதிவான மழை (மில்லி மீட்டரில்)மலர் காலனி 111.6அண்ணா நகர் 76.8கொளத்துார் 70.8தேனாம்பேட்டை 67.5திரு.வி.க., நகர் 67.2மணலி 62.1கோடம்பாக்கம் 53.7ஆலந்துார் 31.5அம்பத்துார் 30.2வானகரம் 21.6அடையார் 19.8மாதவரம் 18வளசரவாக்கம் 13.2அம்பத்துார், மதுரவாயல், கொளத்துார், கொரட்டூர், பாடி, வளசரவாக்கம், எம்.ஆர்.சி., நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது.இதனால் கடைசி நேர தீபாவளி பொருட்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அபபாவி
அக் 30, 2024 19:42

வீட்டுல தம்மாத்தூண்டு இடத்தில் ஒரு கெணறு இருந்தா அதை மூடிட்டு அதுக்கு மேலே டாய்லெட் கட்டி வாடகைக்கு விடும் கும்பல். பேராசை புடிச்ச கூட்டம். பூட்டிட்டு போனா , பெய்யும் மழை தண்ணி உள்ளே வராம எங்கே போகும்? போங்க வூட்டுக்கு, அப்பார்ட்மெண்ட்டுக்கு ஒரு கிணறு தோண்டி தண்ணீரை உள்ளே போக விடுங்க.


அப்பாவி
அக் 30, 2024 19:39

மிக்க மகிழ்ச்சி. பட்டாசுகள் நமத்து வெடிக்காமல் போய் பொல்யூஷன் குறையட்டும்.


BALACHANDRAN
அக் 30, 2024 18:31

ரோடுகளை அதிகமாக தோண்டுவதன் மூலம் அதை தன்மையை முற்றிலும் இழந்து விடுகிறது.மண் பரிசோதனை அவசியம் தேவைப்படுகிறது


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 30, 2024 18:17

சிங்கார சென்னை இல்லைங்கோ. அது சிங்காரி சென்னை. மறக்காம அடுத்த முறையும் ஒட்டுப் போடுங்கோ.


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 30, 2024 18:16

வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு போனால் திரும்பும்போது வீடு தண்ணீரில், குடும்பம் கண்ணீரில்... என்ன கொடுமை சரவணா இது?


Devanand Louis
அக் 30, 2024 15:07

சிங்காரி சென்னையின் அவலம் - 30 நிமிடம் பெய்தமலையில்கூட மழைத்தண்ணீர் தேங்குகிறது , இதுதான் சிங்காரி சென்னை . அந்த 4000 கொடிகள் பணத்தை ஒழுங்காக அரசு செலவளித்துஇருந்தால் இந்த நிலைமை வந்துஇருக்காது . சிங்கார சென்னையாகஇருந்தது AIADMK ஆட்சியில் ஆனால் இந்த திராவிட மாடல் ஊழலமுகுந்த ஆட்சியின் சிங்காரி சென்னையாக மாறிய அவலம்


raja
அக் 30, 2024 14:37

அய்யய்யோ விடியா பசங்க பம்பு செட்டு படகு எல்லாம் ரெடியா வைச்சிருகானுவோலோ இல்லையான்னு தெரியலையே...மங்குனி மாசு கூட எதும் சொல்லலையே... பக்கிங்க நாங்க ஒதுக்குன 4000 கோடி ரூபாய் பத்தி பேசுவானிவோலே....


angbu ganesh
அக் 30, 2024 17:13

அய்யய்யோ விடியா பசங்க கொஞ்சம் ஒரு எழுத்து முன்னாடி சேர்ந்திருந்தா அதன் விடியா அரசு


sundarsvpr
அக் 30, 2024 14:18

நல்ல மழை பெய்தால் நல்ல மகிழ்ச்சி. ஆனால் கன மழை அரசுக்கு அரசு பயப்படும். இரண்டுக்கட்டான் வானம் பொழிந்தால் யாருக்கு லாபம்.


முக்கிய வீடியோ