உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளதால், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இன்றும் நாளையும்(பிப்.,1, 2) லேசான மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளது. இதனால், தமிழகத்தில் சில மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன்படி, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இன்றும் நாளையும் லேசான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். பகலில் வறண்ட வானிலை நிலவும். நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில், இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி ஏற்படும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 31 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
பிப் 01, 2024 08:54

புதிய பஸ் வளாகம் அமைந்துள்ள அந்த கேளம்பாக்கம் பக்கம் மழை பெய்ய வாய்ப்புள்ளதா? முன்னரே அரசுக்கு தெரிவித்தால், போதுமான படகுகளை அங்கே நிறுத்தி, வெள்ளத்தின்போது, மக்களை அங்கிருந்து படகுகளில் நகரத்தின் மற்றப்பகுதிகளுக்கு கொண்டுசேர்க்கலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை