உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூரண மதுவிலக்கு சாத்தியமில்லாதது

பூரண மதுவிலக்கு சாத்தியமில்லாதது

என்கவுன்டர் கொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. நல்ல காவல் துறைக்கு இது அழகல்ல. பூரண மதுவிலக்கு வெற்றியடையும் கொள்கை அல்ல. நெடுஞ்சாலை, வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகளின் அருகில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மது விற்க வேண்டும். மது வாங்குவோரிடம் ஆதார் வாங்க வேண்டும். டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்க வேண்டும். ஏற்கனவே கள்ளச்சாராயம் உள்ளது. மதுவிலக்கு என்றால், மேலும் கள்ளச்சாராயம் அதிகரிக்கும். சர்வதேச கார் ரேஸ் நடத்தும் அளவிற்கு, நம்மால் சாலை போட தேவையான தொழில்நுட்பம், திறமை, பொறியாளர்கள் உள்ளதை நிரூபித்திருக்கிறோம். அந்த தொழில்நுட்பத்தை வைத்து, குண்டும் குழியும் இல்லாத சாலைகளை தமிழகம் முழுதும் போட முடியும். அப்படி செய்யும் போது, எந்த மழைக்கும் அஞ்சாமல் இருக்கலாம். -கார்த்தி, காங்., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ