உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேனுவல் கியர்பாக்ஸில் வரும் டொயோட்டா பார்ட்யூனர் லெஜென்டர்

மேனுவல் கியர்பாக்ஸில் வரும் டொயோட்டா பார்ட்யூனர் லெஜென்டர்

'டொயோட்டா பார்ட்யூனர் லெஜென்டர்' எஸ்.யூ.வி., கார், முதல் முறையாக மேனுவல் கியர் பாக்ஸில் வந்துள்ளது. தற்போது, 4 - வீல் டிரைவ் அமைப்பிலும் வருகிறது. ஏற்கனவே, ஆட்டோ கியர் பாக்ஸில் வரும் 2 - வீல் மற்றும் 4 - வீல் டிரைவ் அமைப்புகளில் இந்த மாடல் கார் வருகிறது.இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த காருக்கு, போட்டியாளராக உள்ள 'எம்.ஜி., கிளாஸ்டர்' மற்றும் 'ஜீப் மெரிடியன்' எஸ்.யூ.வி.,கள் ஆட்டோ கியர் பாக்ஸில் மட்டுமே வருகின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட லெஜென்டர் காரின் விலை, ஆட்டோ கியர்பாக்ஸ் 4 - வீல் டிரைவ் காரை விட, 1.73 லட்சம் ரூபாய் குறைவாக உள்ளது. அதாவது, இந்த காரின் விலை 46.36 லட்சம் ரூபாயாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !