உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டோ கட்டணத்தை தொழிற்சங்கத்தினர் நிர்ணயிக்க முடியாது!

ஆட்டோ கட்டணத்தை தொழிற்சங்கத்தினர் நிர்ணயிக்க முடியாது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆட்டோ கட்டணத்தை, அரசு தான் நிர்ணயிக்கும்; தொழிற்சங்கத்தினர் நிர்ணயிக்க முடியாது. கூடுதல் கட்டணம் யாரேனும் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்' என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.மினி பஸ் கட்டணத்தை சீரமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து ஆட்டோ சங்கங்கள் சில தன்னிச்சையாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோமீட்டருக்கு 50 ரூபாயும், கூடுதலாக ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 18 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்படும் என்றும், காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ஒரு ரூபாய் 50 பைசா பெறப்படும் எனவும், இந்த புதிய கட்டண உயர்வு பிப். 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஆட்டோ சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை வருமாறு:சில ஆட்டோ சங்கங்கள் பிப்.,1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்துக்கு வந்துள்ளது.ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பான முடிவுகள் பரிசீலனையில் உள்ளன.ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வட்டார போக்குவரத்து அலுவலகர்களுக்கு நாளை வழங்கப்படும்இவ்வாறு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

visu
ஜன 30, 2025 07:48

இவங்களும் நிர்ணயிக்க மாட்டாங்க மீட்டர் இல்லாத ஆட்டோ பிடிக்கமாட்டாங்க பேசாம ஓலா போல அரசே ஒரு ஆப் அமைக்கலாம் அதில் இணையாமல் ஆட்டோ ஓட்டக்கூடாது என்று சட்டம் போடலாம்


Oru Indiyan
ஜன 29, 2025 22:37

அப்படின்னா... யூபர் , ஓலா, ராபிடோ போன்ற ஆட்டோ சங்கங்கள் என்ன கட்டணத்தை வசூலிக்கிறார்கள். அவர்கள் இஷ்டத்துக்கு மாத்துகிறார்கள் ..காலை ஒரு கட்டணம். மதியம் ஒரு கட்டணம் இரவு ஒரு கட்டணம்...


ஆரூர் ரங்
ஜன 29, 2025 22:12

ஆட்டோகளில் ஜிபிஎஸ் உள்ள மின்னணு மீட்டர்களை அரசே தனது செலவில் நிறுவ வேண்டும் என்ற கோர்ட் உத்தரவை பத்தாண்டுகளுக்கு மேல் நிறைவேற்றாமல் விட்டுவிட்டு, இப்போ ஓட்டுநர் சங்கங்கள் தாமாகவே நிர்ணயித்ததை அரசு எதிர்ப்பது திராவிஷ மாடல் நாடகம்.


nv
ஜன 29, 2025 22:11

எதாவது ஒரு கட்சி அவர்களின் தேர்தல் அறிக்கையில் இந்த ஆட்டோ காரர்களின் கூட்டத்தை அடக்கவும், கட்டணத்தை சீரமைக்கவும் வாக்குறுதி கொடுத்தால் அவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும்


Ramesh Sargam
ஜன 29, 2025 21:56

எனது 68 வருட வாழ்க்கையில், சென்னையில் இதுவரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் ஆன் செய்துபார்த்ததில்லை . ஆட்டோ என்று கூப்பிட்ட உடனே, மீட்டருக்கு மேல் இவ்வளவு தரமுடியுமா என்றுதான் கேட்பார்கள் தவிர, மீட்டரை ஆன் செய்து அதன்படி கட்டணம் வசூலித்து இதுநாள் வரையில் நான் பார்த்தது இல்லை. இதில் கட்டண உயர்வாம்..? பல ஆட்டோக்களில் அந்த மீட்டர் ஒரு மஞ்சள் துணியால் மறைத்து கட்டப்பட்டிருக்கும்.


கோமாளி
ஜன 29, 2025 21:52

விவசாயி காய்கறிக்கு விலை நிர்ணயிக்க முடியாது, தொழிலாளி கூலி உயர்வு கேட்கக்கூடாது, ஏழை நீதி கேட்க முடியாது, இளைத்தவன் அரசை தட்டி கேட்கக்கூடாது.... இது என்ன அரசாங்கமா இல்லை இடி அமீன் ஆட்சியா??


புதிய வீடியோ