உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலைப்பளு ஒப்பந்தத்தை விரைவாக ஏற்படுத்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை

வேலைப்பளு ஒப்பந்தத்தை விரைவாக ஏற்படுத்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை

சென்னை:ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்து, புதியவர்களை வேலைக்கு எடுக்க, 2019 முதல் நிலுவையில் உள்ள வேலைப்பளு ஒப்பந்தத்தை விரைவாக ஏற்படுத்த மின் வாரியத்திற்கு, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழக மின் வாரியம், 2,850 பிரிவு அலுவலகங்களுடன் செயல்படுகிறது. இவற்றின் வாயிலாகவே, புதிய மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட மின் வினியோக பணி கள் மேற்கொள்ளப்படுகின்றன . உதவி பொறியாளர் தலைமையில் செயல்படும் ஒரு பிரிவு அலுவலகத்தில், கள உதவியாளர், கம்பியாளர் உட்பட சராசரியாக, 20 பேர் இருக்க வேண்டும்; பல அலுவலகங்களில் பாதி பேர் கூட இல்லை. கள உதவியாளர் முதல் தலைமை பொறியாளர் வரை அனைவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, அவர்களின் வேலைப்பளுவும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, ஒரு பிரிவு அலுவலக பணியாளர்கள் கிராமங்களில், 140 டிரான்ஸ்பார்மர்களில் இருந்து வினியோகம் செய்யப்படும் மின் இணைப்புகளையும், நகரங்களில், 18,200 மின் இணைப்புகளையும் பராமரிக்க வேண்டும். இதேபோல், மின் பயன்பாடு கணக்கு எடுப்பது உட்பட ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி வேலைப்பளு உள்ளது. கடந்த, 2019ல் ஏற்படுத்தப்பட வேண்டிய வேலைப்பளு ஒப்பந்தம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து, தொழிற் சங்கங் களின் நிர்வாகிகள் கூறியதாவது: ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2022ல் கையெழுத்தானது. அப்போது, வேலைப்பளு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. புதிய பதவிகளுக்கும் அனுமதி தரப்படவில்லை. பின், 2023ல் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியும், வேலைப்பளு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால் புதிய பணியிடங்களும், பதவிகளும் உருவாக்கப்படும். புதியவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த ஆறு ஆண்டுகளில், பல புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. பல பதவிகளில், 56,000 காலி பணியிடங்கள் உள்ளதால், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகம் உள்ளது. வேலைக்கு ஆட்களை எடுக்கக்கூடாது; ஏற்கனவே உள்ளவர்களை வைத்தே அதிக வேலைகளை வாங்கலாம் என்று கருதியே, வேலைப்பளு ஒப்பந்தம் செய்யப்படாமல் தாமதம் செய்யப்படுகிறது. எனவே, விரைவாக வேலைப்பளு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை