வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சுற்றுலா வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் அருகே குருங்களூர் பகுதியில், தஞ்சாவூர் விக்கிரவாண்டி சாலையில் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுற்றுலா வந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o1idux9b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உயிரிழந்தவர்கள் குமார், அவரது மனைவி ஜெயா, நீலவேணி, துர்கா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குமாரின் மகள் மோனிஷா, மகன் ஸ்டாலின் மற்றும் சரக்கு வாகனம் டிரைவர் விக்னேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்