கடலூரில் பரிதாபம்: மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
கடலூர்: கடலூரில் விவசாயப் பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை விட அதிக மழை இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.இந்நிலையில், கடலூரில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வேப்பூர் அரகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த நிலத்தில் களை எடுத்து கொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தவமணி என்பவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்