மேலும் செய்திகள்
இந்தாண்டில் இதுவரை 5,946 கண்கள் தானம்
11 minutes ago
சென்னை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில், ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜோலார்பேட்டை - - சேலம் -- கோவை வழித்தடங்களில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஒரு வாரமாக, இந்த தடத்தில் மணிக்கு அதிகபட்சமாக, 143 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தி வருகிறோம். ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும். அதன்பின், ஜோலார்பேட்டை - கோவை இடையே மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்படும். இதன் வாயிலாக, சென்னை - கோவை தடத்தில், 20 முதல் 30 நிமிடங்கள் வரை பயணம் நேரம் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
11 minutes ago