உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பராமரிப்பு பணிகளால் ரயில்கள் சேவையில் மாற்றம்

 பராமரிப்பு பணிகளால் ரயில்கள் சேவையில் மாற்றம்

மதுரை: மதுரை கோட்டத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பகுதி ரத்து * பிப்., 1 முதல் 27 வரை (செவ்வாய் தவிர்த்து) ஈரோடு - செங்கோட்டை (16845), பிப்., 2 முதல் 28 வரை (புதன் தவிர்த்து) செங்கோட்டை - ஈரோடு (16846) ஆகிய ரயில்கள் திண்டுக்கல் - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன. சிறப்பு ரயில் பயணிகள் வசதிக்காக பிப்., 2 முதல் 28 வரை (புதன் தவிர்த்து) சிறப்பு ரயில் (06846), அதிகாலை 5:10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 9:30 மணிக்கு மதுரை வரும். பிப்., 1 முதல் 27 வரை (செவ்வாய் தவிர்த்து) சிறப்பு ரயில் (06845) மாலை 6:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். திருமங்கலம், விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக செல்லும். மாற்றுப் பாதை * பிப்., 2 முதல் 28 வரை புதன் தவிர்த்து மற்ற நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), சனி தோறும் கன்னியாகுமரி - ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். * திங்கள், செவ்வாய் தவிர்த்து மற்ற நாட்களில் குருவாயூர் - சென்னை எழும்பூர் (16128), வெள்ளி தோறும் கன்னியாகுமரி - ஐதராபாத் (07229) ஆகிய ரயில்கள் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். * பிப்., 3, 7, 8, 10, 14ல் கோவை - நாகர்கோவில் ரயில் (16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். * பி ப்., 5ல் வைஷ்ணோ தேவி கட்ரா - திருநெல்வேலி (16788), பிப்., 8ல் மயிலாடுதுறை - செங்கோட்டை (16847) ஆகிய ரயில்கள் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். * பிப்., 21ல், மதுரை - குருவாயூர் (16327), பாலக்காடு - திருச்செந்துார் (16731) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செல்லும். நாகர்கோவில் - காச்சிகுடா ரயில் (16354) விருதுநகர், மானாமதுரை வழியாக செல்லும். * பிப்., 21, 22, 24, 25, 26ல் செங்கோட்டை - மதுரை ரயில் (56772), விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக செல்லும். * பிப்., 25ல் நாகர்கோவில் - கோவை - நாகர்கோவில் (16321/16322), மதுரை - குருவாயூர் (16327), திருவனந்த புரம் - திருச்சி (22628), பாலக்காடு - திருச்செந்துார் - பாலக்காடு (16731/16732) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை