உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய்களுக்கு கருத்தடை டாக்டர்களுக்கு பயிற்சி

நாய்களுக்கு கருத்தடை டாக்டர்களுக்கு பயிற்சி

சென்னை:தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, தமிழகம் முழுதும், 100 கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் துவக்கப்பட உள்ளன. இதற்காக, தமிழக அரசு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் ஐந்து கால்நடை டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 500 கால்நடை டாக்டர்களுக்கு, நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது குறித்த பயிற்சி வழங்க, தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் செயல்படும், ஏழு உறுப்பு கல்லுாரிகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த வாரம் முதல் பயிற்சி துவங்கும் என, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை