உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிதாக தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி * அன்புமணி வலியுறுத்தல்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி * அன்புமணி வலியுறுத்தல்

சென்னை:புதிதாக தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, ஐந்து மாதங்களாகியும், பயிற்சி அளிக்கப்படாமல் இருப்பதற்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக காவல் துறைக்கு, இரண்டாம் நிலைக் காவலர்கள் 2,599 பேர்; சிறைத்துறைக் காவலர்கள் 86 பேர்; தீயணைப்பு வீரர்கள் 674 பேர் என மொத்தம் 3,359 பேரை தேர்வு செய்ய, 2023 ஆக., 8ம் தேதி அறிவிப்பு வெளியானது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கடந்த நவ., 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.அவர்களில், இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைத் துறை பணியாளர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு விட்டனர். தீயணைப்பு வீரர்கள் மட்டும், இன்னும் பயிற்சிக்கு அனுப்பப்பட வில்லை. இதனால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பணி நியமன ஆணை பெற்றும், தங்களுக்கு வேலை உண்டா, இல்லையா என்ற, சந்தேகத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.வேலைக்கான ஊதியம் கிடைக்காததால், அவர்களின் குடும்பங்களும் அவதிப்படுகின்றன. கோடைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், தீயணைப்புத் துறையின் பணிச்சுமை அதிகரிக்கும். தீ விபத்து ஏற்பட்டால், அவற்றை சமாளிக்க, தீயணைப்பு வீரர்கள் அதிகம் தேவை. எனவே, தீயணைப்புத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட, 674 வீரர்களையும், உடனடியாக பயிற்சிக்கு அனுப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை