உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன மழையால் ரயில்கள் 30 நிமிடம் தாமதம்

கன மழையால் ரயில்கள் 30 நிமிடம் தாமதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கனமழையால், விரைவு ரயில்கள் போக்குவரத்தில், 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டது. சில ரயில்கள், கடற்கரை, ஆவடி, திருவள்ளூரில் இருந்து இயக்கப்பட்டன.ராமேஸ்வரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வைகை விரைவு ரயில்கள் நேற்று, 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக சென்னை எழும்பூர் வந்தன. திருநெல்வேலி - எழும்பூர், 'வந்தே பாரத்' ரயில், நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. இதேபோல், எழும்பூர் - புதுடில்லி ஜி.டி., விரைவு ரயில் உட்பட சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

இடம் மாற்றம்

 சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ஜீவா இடையே ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், சென்ட்ரலில் இருந்து செல்ல வேண்டிய சில ரயில்கள், திருவள்ளூர், ஆவடியில் இருந்து நேற்று இயக்கப்பட்டன திருப்பதி - சென்ட்ரல், கோவை - சென்ட்ரல் ரயில்கள் ஆவடி வரையிலும், மைசூரு - சென்ட்ரல், மங்களூரு - சென்ட்ரல் விரைவு ரயில்கள் திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன சென்ட்ரல் - கோவை, சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு, சென்ட்ரல் - ஈரோடு உள்ளிட்ட ஆறு விரைவு ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து நேற்று இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
டிச 01, 2024 11:13

நிறைய ரெய்னா கொட்டியிருக்கு. வாட்டர் நிக்குது. சைக்கிளோன் வந்தா BEAR பண்ணிக்கணும். எனக்கு லிப்ஸ்டிக் போட்டுக்க லிட்டில் மோர் டயம் குடுங்க. அப்புறம் விடியல் கார்ல தொத்திக்கிட்டு வந்து பாக்குறேன். பிரியமுடன்.


இறைவி
டிச 01, 2024 06:11

அதிக கன மழையோ ஒரு மணி நேரத்தில் 20 செமீக்கும் அதிகமாகவோ சென்னையில் மழை கொட்டி விடவில்லை. நிதானமாகவே பெய்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான சாலைகள், தரைவழி பாலங்கள் எல்லாம் மழை நேரில் முழுகி உள்ளன. அப்படியானால் 4000 கோடி ரூபாயில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டது எல்லாம் பொய்யா கோபால். இதுதான் யாரும் குறையே சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி. காசுக்கும் குவாட்டருக்கும் வெட்கமில்லாமல் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரையிலும், ஓட்டு சதவிகிதத்தை அதிகரிக்க ஆமாம் சாமி போடும் கட்சிகளை வளைத்து வைத்து இருக்கும் வரையிலும் தீயமுகதான் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வரும். மக்கள் எப்போதும் போல சகதியில் உழலும் ஜீவன்களாக சந்தோஷத்தை அனுபவிப்போம். இதுவரை கட்சி சார்பாக காசு கொடுத்தது போக இப்போது அரசு செலவிலேயே மகளிர் உரிமைதொகை என்ற பெயரில் மாதாந்திர காசு கொடுக்கிறார்கள். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு வரி, மின்சார உயர்வு மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நம்மிடம் பிடுங்குகிறார்கள். நாமும் பல்லிளித்து ஓட்டு போடுவோம்.


சமீபத்திய செய்தி