உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - ஜோலார்பேட்டை இடையே 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்க திட்டம்

சென்னை - ஜோலார்பேட்டை இடையே 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்க திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை - ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாடு முழுதும் விரைவு ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள், சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை தடத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில்வே விதிப்படி, 'குரூப் ஏ' வழித்தடத்தில், அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்ட்ரல் - அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்துக்கு முன்னுரிமை அளித்து, பணிகள் நடந்து வருகின்றன.அதிக வளைவுகளை நீக்குவது, ரயில் பாதையை மேம்படுத்துவது, மிகவும் பழமையான ரயில்வே பாலங்களை நீக்குவது, 'சிக்னல்' தொழில்நுட்பம் மேம்படுத்துதல், தேவையான இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.தற்போது, 50 சதவீத பணிகளை முடித்துள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் எஞ்சியுள்ள பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 12, 2025 09:48

முதல்ல தேவையான ரயில்களை இயக்குங்கன்னு பல முறை கேட்டாச்சு. ஆனால், எதுவும் நடந்தபாடில்லை. இரட்டை ரயில் பாதை அமைத்தால் அறுத்து தள்ளி விடுவோம் என்றார்கள். அதுவும் வந்துவிட்டது. ஆனாலும் பயனில்லை. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு இன்றைக்கும் ரயில் பயணம் என்பது பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. அதுவும் பண்டிகை காலங்களில் ரயில் பயணசீட்டு கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. தீபாவளி பயணசீட்டு காத்திருப்பு பட்டியல் நிறைய ரயில்களில் 800+ என்ற அளவு முன்பதிவின்போது இருந்தது. இந்த அளவு காத்திருப்பு பட்டியல் உறுதிப்படுத்த இயலாது. இதில் ரயில்வே துறை பயணசீட்டு ரத்து கட்டணம் வசூலித்து நன்கு கொள்ளையடிக்கிறார்கள். தேவையான ரயில்களை இயக்காமல் அரசியல்வாதிகளும் அவர்களின் பினாமிகளும் கொடுக்கும் அழுத்தத்திற்கு துணை செய்து, லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களை வதைக்கிறார்கள். ஆம்னி பேருந்துகள் மக்களிடம் கொள்ளையடித்து கருப்பு பணத்தை உருவாக்குகிறார்கள். அதை மக்களுக்கு ஓட்டுக்கு பணமாக கொடுத்து ஆட்சியை பிடிக்கிறார்கள். பிறகு லஞ்ச ஊழல் ஈடுபட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்து வெளிநாடுகளில் கொண்டு பதுக்கி இந்தியாவின் பொருளாதாரத்தை வாழ்த்துகிறார்கள்.


தியாகு
செப் 12, 2025 13:26

இதெல்லாம் நடக்காம இருக்கணும்னா கட்டுமர திருட்டு திமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போடாமல் இருக்கணும்.


Sriniv
செப் 12, 2025 09:46

அப்படி என்றால், பெங்களூர் சென்னை மெயில் இப்போதை விட இன்னமும் சீக்கிரமாக, அதிகாலை 3 மணி அளவில் சென்னை வந்தடையுமா ?


தியாகு
செப் 12, 2025 06:38

சென்னை - ஜோலார்பேட்டை இடையே 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்க திட்டம். சுமார் எழுபது வருடங்களுக்கு முன் இது போன்ற வேகத்தில் ரயில்களை இயக்கி இருந்தால் ஒருவர் திருட்டு ரயிலேறி சென்னைக்கு வந்து டுமிழ்நாட்டையே ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் ஆட்டையை போட்டதை தடுத்திருக்கலாம்.


ديفيد رافائيل
செப் 12, 2025 06:05

Concrete road போட்டா train maximum speed 240kmph to 320kmph speed கூட போகலாம்.


ديفيد رافائيل
செப் 12, 2025 06:00

Concrete இல்லாத ரோட்டில் 160kmph speed என்பது பெரிய பெரிய விஷயம் தான்.


ديفيد رافائيل
செப் 12, 2025 05:59

Train speed போறதுக்கு railway track தான் மிக மிக முக்கியம். Railway track concrete ல் இருந்தா கூட ரொம்ப நல்லா speed போகலாம்.


சமீபத்திய செய்தி