திருநங்கையருக்கு தனி கொள்கை வேண்டும்: மா.கம்யூ
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் அறிக்கை:தமிழகத்தில் திருநங்கை மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர் கொள்கை தொடர்பாக, உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், தனித்தனி கொள்கைகள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை, திருநங்கை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. இதை தமிழக அரசு, நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். தன் பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, திருநங்கையரின் பிரச்னை. இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்யும் விதத்தில், திருநங்கையருக்கு தனிக் கொள்கையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.