உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுடன் பயணிப்பது முரண்பட்ட அரசியல்தான்: திருமாவளவன்

தி.மு.க.,வுடன் பயணிப்பது முரண்பட்ட அரசியல்தான்: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: தமிழகம் மட்டுமல்ல, பீஹார், குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தவிர, அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு இல்லை. இதனால், மனிதவளம் பாழாகிறது. தேசிய அளவிலான மதுவிலக்கு சட்டத்தை வரையறுக்க வேண்டும்; கண்டிப்பாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். இதில் தி.மு.க.,வும் முழு உடன்பாடு கொண்டுள்ளது. முதல்வரை சந்தித்த பிறகும், எங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. துணை முதல்வர் பதவி, அவர்களது தேவையைப் பொறுத்தது. அது, அவர்களது சுதந்திரம். தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன. மக்கள் பிரச்னையான மதுவிலக்கை வலியுறுத்தி மாநாடு நடத்துவதை, தேர்தல் கணக்கு, கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டனர். எப்படியாவது கூட்டணியில் விரிசல், பிளவு ஏற்படாதா என்று பலரும் காத்திருந்தனர்; ஏமாந்து போயினர். அவர்கள் மூக்குதான் அறுபட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட விரக்தி அவர்களிடம் வெளிப்படுகிறது. வி.சி.,யும் தி.மு.க.,வும் ஒரே நேர்கோட்டில் கொள்கையளவில் பயணிக்கின்றன. முரண்பாடான அரசியல் தான். ஆனால், இணைந்து பயணிப்போம்; கொள்கை தளத்தில் இணையாக இருக்கிறோம். தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றன; அதே நேரம், தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம். இதில் எங்கும் முரண்பாடு இல்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

theruvasagan
செப் 19, 2024 07:48

தேசிய அளவிலான மதுவிலக்கு சட்டத்தை வரையறுக்கணுமாம். புழுத்த தேசியவியாதி சொல்லிட்டார். எல்லாரும் கேட்டுக்குங்க. நீட் தேசிய கல்விக் கொள்கை ஒரே தேர்தல் இதுக்கெல்லாம் எதிர்ப்பு. கூட்டாச்சிக்கு பொரியல் ஆட்சிக்கு ஆபத்துன்னு ஒப்பாரி. ஆனால்.ஆகாத வேலை தாங்கள் செய்ய இஷ்டப்படாத வேலைன்னு வந்துட்டா மாத்திரம் தேசீயம் பித்தளைன்னு பேசுவானுக.


selva kppk
செப் 19, 2024 07:04

இவர்களின் அஜெண்டா இது.


Kasimani Baskaran
செப் 19, 2024 05:49

Phd என்றாலும் பிளாஸ்டிக் சேர் என்பது திமுகவின் கோட்பாடு. ஜாதி வெறி பிடித்த தீமகாவை ஆதரிக்கும் அறிவாளிகளுக்கு இது கூட புரியவில்லை. பாமரன் என்றும் பாமரந்தான் போல.


Muthu Kumaran
செப் 19, 2024 05:33

பைத்தியம் முத்தி போச்சு, மாநிலம் மதுவிலக்கு அமுல் படுத்த முடியும் ஆனால் மத்திய அரசு செய்ய வேண்டும். கல்வி பொது பட்டியல் ஆனால் மாநிலம் அதை செய்ய வேண்டும்


Srinivasan Narasimhan
செப் 19, 2024 05:19

சகோ கவலை வேண்டாம் இரண்டு சீட்டு குடுப்பாங்க பிரியாணி கண்டிப்பா உண்டு சாகும் வரை நீங்களே கட்சி தலைவர் பதவியை கெட்டியாக இருக்க பிடிங்க யாருக்கும் தலைவர் பதவியை விட்டு குடுக்கறீங்க வாழ்க ஜனநாயகம்


S. Gopalakrishnan
செப் 19, 2024 07:19

அறிவாலயத்தில் புதுப்புது வண்ணங்களில் பிளாஸ்டிக் நாற்காலிகள் வாங்கப் பட்டுள்ளதாக கேள்வி !


கண்ணன்,மேலூர்
செப் 19, 2024 04:55

திருமாவளவனுக்கு இத்தனை வருஷமா தமிழக மக்கள் மீது இல்லாத அக்கறை இப்போது மட்டும் பொத்துக்கிட்டு வருது இவரது நடிப்பெல்லாம் இனிமேல் எடுபடாது.


Visu
செப் 19, 2024 04:25

டுபாகூர்


சோவிந்தரா சு
செப் 19, 2024 03:28

சரியான கில்லாடி நீ காண போயி. அரசியல் அனாதை ஆக்கபடுவாய்


Selvarajan
செப் 19, 2024 02:57

இப்படி பட்ட அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்


Selvarajan
செப் 19, 2024 02:55

சுயநலவாதி . நம்பி ஓட்டு போடுற மக்களை சொல்லணும்.


A Viswanathan
செப் 19, 2024 08:58

என் வீட்டை நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் உன் வீட்டில் உள்ள ஒட்டையை அடைக்க முயற்சி செய்து அடை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை