உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிராவல்ஸ் உரிமையாளர் கொலை; துபாய் தப்பிய கோவை பெண் கைது

டிராவல்ஸ் உரிமையாளர் கொலை; துபாய் தப்பிய கோவை பெண் கைது

சென்னை: துபாய் டிராவல்ஸ் உரிமையாளர் சிகாமணி, 47, என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்ட கோவையை சேர்ந்த சாரதா, 32, சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.துபாயில் டிராவல்ஸ் நடத்தி வந்த, திருவாரூரை சேர்ந்த சிகாமணி, 47, கோவையில் கொலை செய்யப்பட்டு, கரூரில் புதைக்கப்பட்டார். இது தொடர்பாக, கோவையை சேர்ந்த தியாகராஜன் கோர்ட்டில் சரணடைந்தார். தியாகராஜன், அவரது கள்ளக்காதலி கோமதி, கூலிப்படையை சேர்ந்த புதியவன், வேலைக்கார பெண் சுவாதி, கோமதியின் சகோதரி நீலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். துபாய் சென்ற சாரதா ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு போலீசார், 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சாரதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மே 04, 2025 21:22

இந்த காலத்தில் பெண்கள் கொலை செய்வது அதிகரித்துவிட்டது.


Ganesun Iyer
மே 04, 2025 16:49

சாரதா யாருன்னு சொல்லவே இல்லியே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை