உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்காவில் சிகிச்சை ஜெ., வை காப்பாற்றி இருக்கும்

அமெரிக்காவில் சிகிச்சை ஜெ., வை காப்பாற்றி இருக்கும்

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, போலீசாரை மரியாதையாக நடத்தினோம். சுதந்திரமாக செயல்பட்டனர். ஆனால், இப்போது அப்படியில்லை. அதனாலேயே சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் இருக்கிறது. தமிழகம் முழுதும் போலீசார், அ.தி.மு.க.,வினர் மீது தேவையில்லாமல் வழக்கு போடுகின்றனர். தூத்துக்குடிக்கு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த என் மீதும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீதும் வழக்குப் போட்டுள்ளனர். அதனால், ஒன்றும் ஆகப் போவதில்லை; இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சும் ஆளும் அல்ல. கடந்த 2011ல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 2016லும் வெற்றி பெற்றார். என்னைப் போன்றவர்களை அமைச்சர் ஆக்கினார். அவர், தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக, உடல் நிலை பொருட்படுத்தாமல் உழைத்தார். உடல் நிலை சிரியில்லை என்றதும், அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தால், இன்றும் நம்மோடு இருந்திருப்பார். தமிழகம் மிக நன்றாக இருந்திருக்கும்.எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.L.Narasimman
அக் 30, 2024 08:19

அப்போ சசிகலா குடும்பத்துக்கு கட்டுபட்டிருந்தீங்க. அப்பவே வலியுறுத்தி இதுமாதிரி பேட்டி கொடுத்திருக்கலாம். இப்ப அந்த குடும்பத்தை கட்சியில் சேர்க்கனுங்கிறது எந்த விதத்தில் நியாயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை