உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி சான்று வழங்காமல் ஆண்டு கணக்கில் இழுத்தடிப்பு: ஆர்.டி.ஓ.,க்கள் அலட்சியத்தால் பழங்குடியினர் அவதி

ஜாதி சான்று வழங்காமல் ஆண்டு கணக்கில் இழுத்தடிப்பு: ஆர்.டி.ஓ.,க்கள் அலட்சியத்தால் பழங்குடியினர் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், மானுடவியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி, விண்ணப்பங்களை ஆர்.டி.ஓ.,க்கள் ஆண்டு கணக்கில் நிலுவையில் வைத்திருப்பதால், அவர்கள் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்படுகிறது.பழங்குடியினர் சமூகத்தினர், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தங்களுக்கான 1 சதவீத இட ஒதுக்கீட்டை பெறவும், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளை பெறவும் ஜாதி சான்றிதழ் அவசியம்.

வழங்குவதில்லை

ஆனால், பழங்குடியின மக்கள், ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், தாசில்தார், ஆர்.டிஓ., உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், உடனடியாக சான்றிதழ் வழங்குவதில்லை. உண்மை தன்மையை கண்டறிய, மானுடவியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் எனக்கூறி, விண்ணப்பங்களை நிலுவையில் வைத்து விடுவதாக, பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சான்றிதழ் கிடைக்காததால், அவர்கள் அரசின் சலுகைகள் எதையும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.இதுகுறித்து, விளிம்பு நிலை பழங்குடி நல கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியதாவது:தமிழகத்தில் கதர், கம்மாரா, கணியன் உள்ளிட்ட 37 வகை பழங்குடியினர் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட காரணத்திற்காக, அவர்களில் சிலர் மலைப் பகுதிகளில் இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன் நிலத்திற்கு வந்தனர். அவ்வாறு வந்தவர்களில் ஆதியன், இருளர், மலைக்குறவர், நரிக்குறவர், மலையாளி சமூகத்தினர், நாடோடிகளாக உள்ளனர். இவர்களின் அடிப்படை தேவை ஜாதி சான்று. ஆனால், இச்சமூகத்தினர் தற்போது வரை பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் பெற போராடி வருகின்றனர்.

மானுடவியல் ஆய்வு

எஸ்.சி., - எம்.பி.சி., - பி.சி., - ஓ.பி.சி., உள்ளிட்ட இதர பிரிவினர், ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கு 15 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், எஸ்.டி., பிரிவினர், பழங்குடியினர் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், மானுடவியல் ஆய்வு உள்ளிட்ட காரணங்களை கூறி, ஆர்.டி.ஓ.,க்கள் ஆண்டுகளை கடத்துகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதியன் சமூகத்தைச் சேர்ந்த 20 பேர், ஹிந்து - ஆதியன் பழங்குடியினர் சான்றிதழ் கோரி, 2023ல் விண்ணப்பித்தனர். இதுவரை அவர்களுக்கு திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., சான்றிதழ் வழங்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 'விண்ணப்பதாரரின் இனத்தை கண்டறிய முடியாததால், மானுடவியல் ஆய்விற்கு உத்தரவிட்டு உள்ளோம்' என்றனர். அதற்கான ஆணையிடப்பட்டு ஓராண்டாகியும், மானுடவியல் துறையினர் ஆய்வு நடத்தவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதில் இல்லை.

1,000 விண்ணப்பம்

இதேபோல், கடலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 1,000 விண்ணப்பங்கள், மானுடவியல் ஆய்வு என நிலுவையில் உள்ளன. இதனால், குழந்தை திருமணம், பள்ளி இடைநிற்றல் என்பது இச்சமூக மக்களிடையே அதிகரித்துள்ளது. சிலர் வேறு வழியின்றி, எஸ்.சி., - ஓ.சி., உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.எனவே, பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்தி, நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பதார்களுக்கும், பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

KALIDASS S
மே 12, 2025 23:15

நான் காளிதாஸ் சே திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் செங்கம்பூண்டி கிராமத்தில் வசித்து வருகின்றோன் மானுடவியல் குழு ஆய்வுக்கு பின்பும் பழங்குடியினர் சான்றிதழ் தர மறுக்கிறார்கள் ஒரோ குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பல்வேறு சான்றிதழ் கொடுத்து உள்ளனர் இதில் மிகவும் பாதிக்கப்பட்டவன் நான்


Nandha
மே 21, 2025 12:09

சார் தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது,


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 12, 2025 10:19

இந்த அந்நிலத்தில் இப்படி இழுத்தடித்ததின் விளைவால் அண்டை மாநிலத்தவர் சுறுசுறுப்பாக சான்றிதழ் கொடுத்து இந்த மாநிலத்திலுள்ள மத்திய அரச பணிகளில் சேர்ந்தார்கள். ராக்கெட் வேகத்தில் பதவி உயர்வுகளையும் பெற்றார்கள். முத்தான ஊர்களில் நல்ல முறையில் செட்டிலாகி தற்போதும் பங்களாக்களில் வாழ்ந்து வருகிறார்கள்.


தத்வமசி
மே 12, 2025 09:36

அதிகாரிகளுக்கு எவ்வளவு தான் சம்பளம் கிடைத்தாலும், காசு வரல அதனால தரல... அவ்வளவுதான். அம்புட்டு ஊழல், லஞ்சம் அதலபாதாளம் வரை பாய்ந்துள்ளது. இல்லையென்றால் அரசியல்... ஓட்டு வங்கியை உருவாக்க எவனாவது ஒருத்தன் தடுத்துக்கிட்டே இருப்பான்.


V RAMASWAMY
மே 12, 2025 08:15

தகுதி இருக்கிறதோ இல்லையோ, அதிகப்பணம் கொடுத்து, குறுக்கு வழிகளில் அரசு பணியில் சேர ஆர்வமுடையவர்கள் லட்சியம் கொள்ளையடிப்பதற்குத்தான்.


Jayakumar
மே 12, 2025 06:46

In Andhra and Telangana most people get SC/ST certificate very easily. This helps them get seat in IIT, NIT and AIIMs also in govt job. Whole state population gets benefited. If tighten our people who are genuinely eligible it is great injustice.


மீனவ நண்பன்
மே 12, 2025 06:42

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியில் இப்படி ஒரு நிலைமையா ?


Kasimani Baskaran
மே 12, 2025 05:14

டுபாங்கூர் சமூக நீதி பல்லிளித்த சமயம்...


Mani . V
மே 12, 2025 04:30

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை பார்க்காமல் வெட்டியாய் பொழுதைக் கழிக்கும் இந்த ஆர்.டி.ஓ க்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?


Kasimani Baskaran
மே 12, 2025 10:34

நிர்வாகம் எதற்கு, ஆட்சி எதற்கு? ஓட்டுப்போடுவது காமடி செய்யவா கோபால்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை