உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அது போன மாசம்.. இப்போ இந்த மாசம்! கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அது போன மாசம்.. இப்போ இந்த மாசம்! கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சியில் உள்ள பிரபல கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி கருமண்டபம், கோட்டை, தென்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், மெயின்கார்டு கேட் பகுதியில் இருக்கும் மகளிர் கல்லூரி ஒன்றுக்கும் இன்று அதிகாலையில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=atxta2rl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். களத்தில் இறங்கிய அவர்கள், எங்கேனும் வெடிகுண்டு வைக்கப்பட்டனவா என தீவிர சோதனை நடத்தினர். சிறிதுநேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 3 பள்ளிகள், ஒரு கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதேபோன்று திருச்சி மாநகரில் இ-மெயில், கடிதம் மூலம் 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது மீண்டும் இதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
நவ 05, 2024 20:42

அடுத்தடுத்த மாதங்களில் கோர்ட், கோவில், சினிமா தியேட்டர்னு மிரட்டல் வந்துருமோ?


Balasubramanian
நவ 05, 2024 17:19

பள்ளிகள் இருந்தால் இதுபோன்ற மிரட்டல்கள் வருகிறது. நீட் தேர்வு இருப்பதால் தான் சில மாணவச் செல்வங்கள் தற்கொலை முடிவை எடுக்க வாய்ப்பாகிறது. எனவே நீட்டை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல் பள்ளிகளையும் ஒழித்து விட வேண்டியதுதான்


வைகுண்டேஸ்வரன்
நவ 05, 2024 14:12

நீங்கள் சொன்ன மாதிரி நூறு இடங்களுக்கும் முதல்வரும் துணை முதல்வருமே வா ஓடிக்கிட்டு இருக்க முடியும்??


narayanansagmailcom
நவ 05, 2024 12:33

இது வரை மூன்று முறை வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. அது பற்றி நம்ம போலீஸ் இன்னும் விசாரணை பண்ணி கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு பெயர் ஸ்கோலேண்ட் போலீஸ்


Ramesh Sargam
நவ 05, 2024 12:21

இந்த மிரட்டல்களை விடுவது யார் என்றால், பெற்றோர்களுக்கு அடங்காத, பள்ளி கல்லூரிகளுக்கு செல்லாத, பல வேலையற்ற குடிகார இளைஞர்கள்தான். குடியை முதலில் ஒழித்தால் பாதி இளைஞர்கள் திருந்த வாய்ப்புண்டு. குடியை ஒழிக்க முடியாத அரசு. இப்பொழுது போதைப்பொருட்கள் நடமாட்டம் வேறு அதிகம். அவை எல்லாம் தாராளமாக கிடைப்பதால்தான் வீட்டிற்கு அடங்காமல், அல்லது வீட்டில் திருடி இப்படிப்பட்டகெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி பொழுதுபோக்காக மிரட்டல் விடுக்கிறார்கள். அவர்களை பிடித்து பொதுவெளியில் கட்டிப்போட்டு மக்களை விட்டு அடிக்க வேண்டும். போலீஸ், நீதிமன்றம், சட்டம் இவையெல்லாம் உதவவே உதவாது.


வைகுண்டேஸ்வரன்
நவ 05, 2024 12:09

NIA என்ன பண்றாங்க? 3 மெயில் வரும் வரை?


Barakat Ali
நவ 05, 2024 12:34

நாட்டில் நூறு இடங்களில் இது போன்ற மிரட்டல்கள் வந்தால் அனைத்து இடங்களுக்கும் என் ஐ ஏ பறக்க முடியுமா? நமது மாநிலத்தில் காவல்துறை தகவல்களை பெற்று என் ஐ ஏ வுக்கு தரலாமே? சட்டம் ஒழுங்கு நிர்வகிப்பவரால் எந்தப்பயனும் இல்லையா ???? முதல்வர், துணை முதல்வர் என்று ஒருவருக்கு இருவராக இருக்கிறார்களே ???? தண்டம் என்று நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டீரே ????


Barakat Ali
நவ 05, 2024 12:35

காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு ஏதாவது தகவல்களைத் திரட்டி என் ஐ ஏ வுக்கு கொடுக்குமா ????


Perumal Pillai
நவ 05, 2024 11:48

ரவுடி ஏரியாவில் இப்படியா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை