உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்எஸ்ஐ வீட்டில் வாலிபர் கொலை: திருச்சியில் 4 பேர் கைது

எஸ்எஸ்ஐ வீட்டில் வாலிபர் கொலை: திருச்சியில் 4 பேர் கைது

திருச்சி: திருச்சியில் சிறப்பு எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்த கும்பல், அங்கு தஞ்சம் அடைந்திருந்த 26 வயது இளைஞரை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருச்சி பீம நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்,26. டூவீலர் மெக்கானிக் ஆன இவர், இன்று (நவ.,10) காலை வேலைக்கு செல்லும்போது, டூவீலரில் 5 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். பீம நகர் போலீஸ் குடியிருப்பு அருகே வந்தபோது, அவர்கள் தாமரைச்செல்வனை வழிமறித்துள்ளனர். பயத்தில் அங்கிருந்து போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரைச்செல்வன், எஸ்எஸ்ஐ செல்வராஜ் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.விடாமல் துரத்தி வந்த 5 பேரும், வீட்டினுள் சென்று தாமரைச்செல்வனை சரமாரியாக வெட்டி கொன்றனர். அதிர்ச்சியடைந்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் கூச்சலிடவே, கொலையாளிகள், அங்கிருந்து தப்பியோடினர். குடியிருப்பில் இருந்த மற்ற போலீஸ்காரர்கள், அவர்களின் குடும்பத்தார் சேர்ந்து ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். தப்பியோடிய நான்கு பேரை போலீசார் பின்னர் கைது செய்தனர்.திருச்சி வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் தங்கியுள்ளார். அப்படியிருக்கையில் அவர் இருக்கும் பகுதி அருகே, அதுவும் எஸ்எஸ்ஐ வீட்டிற்குள்ளேயே கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Rajasekar Jayaraman
நவ 10, 2025 23:10

தேவைப்பட்டால் அமைச்சர் வீட்டில் கூட நடக்கும் போலீசார் ஒன்றும் செய்ய முடியாது அமைச்சர்கள் நினைத்தால் தான் முடியும்.


ganesan
நவ 10, 2025 19:44

எங்க அப்பா துணை இருக்கும் போது targeta mudikkama ebdi poga


Rajasekar Jayaraman
நவ 10, 2025 23:12

கான் கிராஸ் போட்ட பிச்சையும், திருட்டு திராவிடம் போட்ட பிச்சையில் வந்தவர்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது.


Uthamarseeli Kattanthadi
நவ 10, 2025 16:56

Article 356, ஏன் பயன்படுத்தக்கூடாது?. அரசை உடனே கலைக்கவேண்டும். ஆள்பவர்களின் சட்டமும் சரியில்லை ஆளும் சரியில்லை.


Rajkumar
நவ 10, 2025 14:34

ரொம்ப அதிர்ச்சி...


அப்பாவி
நவ 10, 2025 14:12

இவர் இல்லை இன்னும் எவர் ஆட்சிக்கு வந்தாலும் இதேதான் நடக்கும். எதுக்கெடுத்தாலும் பத்தாக்குறை. எங்கேயும் எதிலும் கொள்ளை. ஆட்டை. போட்டி. தில்லுமுல்லு. இந்தியா முழுக்கவே இப்பிடித்தான். நம்ம ஊர்கிட்டே நடப்பதால் எல்லும் பொங்கறாங்க.


SIVA
நவ 10, 2025 13:45

டிஜிபி ஆபீஸ் வாசலில் ஒருத்தரை அடித்து அதை இன்டர்நெட்டில் போட்டு LIKES அள்ளினோம், ஹைகோர்ட் வாசலில் பார் கவுன்சில் ஆபீஸ் வைத்து ஒரு வக்கீலை விரட்டி விரட்டி அடித்தோம் இது சாதாரண ஸ் ஸ் ஐ வீடு இதை போய் பெரிய விஷயமா எழுதறீங்க ....


naranam
நவ 10, 2025 13:02

விடியல் அப்பாவின் சிறப்பான ஆட்சிக்கு இது ஒரு உதாரணம்.


Nanchilguru
நவ 10, 2025 12:54

விடியல் ............


raja
நவ 10, 2025 11:45

சட்டம்.. ஒழுங்கு.. திருட்டு திராவிடம்....மாடல் ... ஆட்சி...


SRIRAM
நவ 10, 2025 11:35

யாருக்கு ஒழுக்கம் இல்லை என்று தெளிவாக பதிவிடவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை