உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை

வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை

செஸ் போட்டி நிறைவு விழாவில், ‘பட்டம்’ இதழ் ஆசிரியர் வெங்கடேஷ், வி.ஐ.டி., பல்கலை கூடுதல் பதிவாளர் மனோகரன், இணை துணை வேந்தர் தியாகராஜன், ‘தினமலர்’ விளம்பரப் பிரிவு இணை பொது மேலாளர் சேகர், தலைமை நடுவர் ரவிகுமார் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினர். வி.ஐ.டி., பல்கலை கூடுதல் பதிவாளர் மனோகரன் பேசியதாவது: வி.ஐ.டி.,யின் மகாத்மா காந்தி அரங்கில், நிகழ்ச்சி நடக்காத நாட்களே இல்லை. இன்றைய நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு உள்ளது. பெரும்பாலும் கல்லுாரி மாணவர்களால் அலங்கரிக்கப்படும் இந்த அரங்கம், இன்று பள்ளி மாணவர்களால் மேலும் அழகாக காட்சியளிக்கிறது. பிரமாண்டத்திற்கு இலக்கணமாகத் திகழும் ‘தினமலர்’ நாளிதழும், வி.ஐ.டி.,யும் இணைந்து நடத்தும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் தனிச்சிறப்பு இருக்கும். போட்டியில் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும், அதில் பங்கேற்கும் அனுபவம்தான் முக்கியம். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றால், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்ற பெற்றோரின் எண்ணம் தவறானது. கடின உழைப்பு இருந் தால், வெற்றி தானாக வரும். இவ்வாறு அவர் பேசி னார்.

தொடர்ந்து நடத்துங்கள் ப்ளீஸ்!

‘தினமலர் பட்டம் செஸ்’ போட்டியின், 13 வயது பிரிவில், முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு இரண்டாவது முறை. கடந்த ஆண்டு, 9வது இடத்தைப் பிடித்தேன். அதனால் , இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பங்கேற்று, முதலிடம் பிடித்துள்ளேன். இது நல்ல அனுபவம். அடுத்த ஆண்டும் பங்கேற்பேன்.செஸ் போட்டி எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இது என் முதல் போட்டி. இதுபோன்ற போட்டிகளைத் தொடர்ந்து நடத்தினால், நானும் தொடர்ந்து பங்கேற்க விரும்புகிறேன்.இந்த போட்டியின் அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது என் மூன்றாவது முறை. ஒவ்வொரு முறையும் இந்த போட்டி எனக்கு புதிய அனுபவத்தை அளிக்கிறது. இதுபோன்ற போட்டிகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.இந்த போட்டியில் பங்கேற்பது, இதுவே முதல்முறை. இதில் முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் கடுமையாக விளையாடினர். சிறந்த போட்டி அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய ‘தினமலர்’ நாளிதழுக்கு நன்றி.- – தனிஷ், மாணவர், 13 வயது பிரிவில் முதலிடம் பிடித்தவர்– லோகேஷ்குமார், மாணவர், 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்தவர்– மிருணாளினி, மாணவியர், 15 வயது பிரிவில், முதலிடம் பிடித்தவர்– சாந்தனா, மாணவியர், 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்தவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !