உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக அரசியல் கட்சிகளுக்கு சிக்கல்

தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக அரசியல் கட்சிகளுக்கு சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தை சேர்ந்த 24 பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தமிழக தேர்தல் கமிஷனருக்கு தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டதும் அரசியல் கட்சிகள் 1. வருமான வரி விலக்கு2. அங்கீகாரம்3. பொது சின்னம்ஒதுக்கீடு4. நட்சத்திர வேட்பாளருக்கான பிரதிநிதித்துவம் ஆகிய சலுகைகளை அனுபவித்து வருகின்றன.தேர்தல் கமிஷன் நடத்தும் தேர்தல்களை சந்திக்கவே இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஏராளமான அரசியல் கட்சிகள் பதிவு செய்தன.ஆனால், கடந்த 2019 முதல் 6 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்பது கவனத்திற்கு வந்துள்ளது.அவற்றில் பல கட்சிகள் இல்லாமல் போய்விட்டன. தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதுடன் அது குறித்து மாநில மற்றும் தேசிய அளவிலான பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும்.அக்கட்சிகளிடம் விளக்கம் பெற்ற பிறகு, ஒரு மாதத்திற்குள் , பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து அக்கட்சிகளை நீக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

PATTALI
ஜூன் 27, 2025 21:20

ஒருபக்கம் ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று கூவிக்கொண்டே மறுபுறம் இடஒதுக்கீடு சலுகைகளை கேட்டு வாங்கி அனுபவிக்கும் கபடதாரிகள் கூட்டம். எப்படி ஜாதியை ஒழிக்கமுடியும்?.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 27, 2025 20:55

ஏனுங்க எனக்கு ஒரு டவுட்டு டவுட் வருது .எல்லா சலுகைகளையும் அனுபவிச்சுக்கிட்டு ஒரு கட்சி அதோட சொந்த சின்னத்துல தேர்தலில் போட்டியிடாம வேற ஒரு கட்சி சின்னத்துல போட்டியிடும்போது ஏன் அந்த கட்சியோட அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது?


Kulandai kannan
ஜூன் 27, 2025 19:49

சைதாப்பேட்டையில் மகாத்மா காந்தி மக்கள் கட்சி என்று ஒரு லெட்டர் பேடு கட்சி இருக்கிறது. தேமுதிக, மதிமுக, லதிமுக, தவாக, மஜக, மமக, நாமக போன்றவற்றிற்கும் அங்கீகாரம் ரத்து செய்து விடலாம்.


Padmasridharan
ஜூன் 27, 2025 19:08

மக்களுக்கு தெரிந்தது ஒரு சில கட்சிகளின் பெயர்களும், சின்னங்களுமே.. வோட்டு போட போன இடத்துல இருபதுக்கும் மேல இருக்கு. . இவங்க யாரு, ஏன் வர்றாங்க, எதுக்காக போட்டினே தெரியல. . இதுல வேற NOTA. மக்கள confuse பண்றதுக்குனே ஒரு அரசியல் கூட்டம்


உண்மை கசக்கும்
ஜூன் 27, 2025 17:39

எல்லா ஜாதி கும்பலுக்கும் ஒரு கட்சி இருக்கும். தேர்தல் போது, திருடர் கட்சிகள் போடும் லட்சக்கணக்கான ரூபாய் பிச்சைக்காக கட்சி ஆரம்பித்தவர்கள்.


GMM
ஜூன் 27, 2025 17:36

கட்சி என்றால் ஒரு வார்டில் 10 சதவீத வாக்காளர் உறுப்பினராக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கட்சிகள் பற்றி பதிவு. அங்கிகாரம் இல்லை. தேர்தலை சந்திக்க பதிவு செய்த உடன் வருமான வரி விலக்கு.6 ஆண்டுகள் ஒரு போட்டி இல்லை. சிக்கல் தேர்தல் ஆணையம் மற்றும் போட்டியிடாத கட்சிகளுக்கும் தான். பதிவு ரத்து. வருமான வரி வசூல் செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு இல்லாத சாதிக்கு வருமான வரி விலக்கு தர பரிசீலிக்க முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை