உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 கோடி உறுப்பினர் சேர்க்கை: களம் இறங்கும் த.வெ.க.,

2 கோடி உறுப்பினர் சேர்க்கை: களம் இறங்கும் த.வெ.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன், நாளை முதல் பணிகள் தீவிரப்படுத்தப்படுகிறது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் தி.மு.க., 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில் வீடுதோறும் சென்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் அரசின் திட்டங்களை கூறும் பணியை துவங்கியுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சார்பில், அதன் பொதுச்செயலர் பழனிசாமி, இன்று முதல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் துவங்குகிறார். இதற்கிடையே, நடிகர் விஜயின் த.வெ.க.,வும் தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளது. கட்சியின் செயற்குழுவில், முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார். மேலும், கொள்கை எதிரிகளான தி.மு.க., மற்றும் பா.ஜ., உடன் கூட்டணி இல்லை எனவும் விஜய் அறிவித்தார். இந்நிலையில், கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிக்கான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன், உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை, பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.இதில், மாவட்டச் செயலர்கள் அனைவரும், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை, 'லேப்டாப்' உடன் அழைத்து வர வேண்டும். கட்சியின் மற்ற நிர்வாகிகளை, ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலர்கள் அழைத்து வர வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Balamurugan
ஜூலை 07, 2025 17:53

18 வயது நிரம்பியோருக்கு தான் வாக்களிக்கும் உரிமை இருக்கு. கொஞ்சமாவது மூளை இருந்தா இவனெல்லாம் கட்சி ஆரம்பிப்பானா?


தமிழன்
ஜூலை 07, 2025 15:03

சம்பாதித்த பணத்தை செலவு செய்ய வழி தெரியாமல் இங்கே வந்துட்டாரு.. இவரை நம்பி தமிழகம் வந்தால் இன்னொரு பொம்மை தான் இருக்கும். நமக்கு தேவை ஆட்சி மாற்றம் இல்லை .. அடிப்படை நிர்வாக சீர்திருத்தம். புனர் நிர்மான் என்று சொல்லுவார்கள் அது தான்..


தமிழன்
ஜூலை 07, 2025 15:01

இது என்ன இன்ஸ்டாகிராம் லைக் மாதிரி இருக்கு.. ஒருவர் எத்தனை கட்சியில் உறுப்பினர் ஆகலாம் என ஒரு சட்டம் கொண்டு வர சொல்லுங்க அப்புறம் சேர்ப்பதை பத்தி யோசிக்கலாம்.


தமிழன்
ஜூலை 07, 2025 14:44

தா வெ க வில் சேருவதற்கு முன் கேளுங்க.. உங்க தலைவர் நிர்வாக திறமை என்ன? இதுவரை என்ன செய்து இருக்கிறீர்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து ஒரு கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்க என ? தமிழகத்திற்கு இன்னொரு பொம்மை முதல்வர் தேவையில்லை .. தமிழக வெற்றி கழகத்தில் பெயர் அளவுக்கு உறுப்பினராக சேர்வதில் எந்த பயனும் இல்லை.. இப்போ தமிழகத்திற்கு தேவை தலைவர் இல்லை.. பாதுகாப்பு அதற்கு அரணாக இருக்கும் ஒருவர். நாற்காலிகளை தேய்க்கும் பொம்மைகள் இல்லை. அதனால் எண்ணிக்கையில் அவர்கள் இருப்பார்கள்.. எண்ணங்களில் நீங்கள் இருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கை அதை அறிமுகம் இல்லாதவரிடம் அடமானம் வைத்து விட்டு நீங்கள் சாதிக்க போவது என்ன?


baala
ஜூலை 07, 2025 12:48

தமாஷ் பண்ணுறானுங்க.


saravan
ஜூலை 07, 2025 11:32

விடுமுறை தினமா பாருங்க அப்பத்தான் ஆரம்ப நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும்


Mecca Shivan
ஜூலை 07, 2025 09:05

இன்றைய தினத்தில் தமிழகத்தில் இருப்பதே 6.35 கோடி வாக்காளர்கள்தான்.. ஏற்கனவே அதிமுகவிடம் மூன்று கோடி உள்ளதாக அந்த கட்சி சொல்கிறது.. திமுகவும் தன்னிடம் மூன்றுகோடி வாக்காளர்கள் உள்ளதாக சொல்கிறது.. பிஜேபி தன பங்கிற்கு 1 கோடி உள்ளதாக சொல்கிறது. இதை கூடினால் 7 கோடி வருகிறது அதாவது 65 லட்சங்கள் அதிகம் .. நாம் தமிழர் விடுதலை மிடுக்குகள் சீன கம்யூனிஸ்டிகள் அரேபிய கட்சிகள் என்று கூட்டிப்பார்த்தாலும் இன்னும் 25 லட்சம் அதிகம் வரும் ..இதில் இந்த கூத்தாடி வேறு ..


SUBBU,MADURAI
ஜூலை 07, 2025 15:27

நெத்தியடி கருத்து SUPERB..


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 07, 2025 06:57

இந்தியாவில் ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டினால் உலக ஜனத்தொகையைத் தாண்டிவிடும்


ramani
ஜூலை 07, 2025 05:57

கூத்தாடிக்கோ டெபாசிட் போக போகுது.‌இது ஏன் இந்த அலம்பல்


Srinivasan Narayanasamy
ஜூலை 07, 2025 04:10

தமிழ்நாட்ல எத்தனை கோடி மக்கள் தான் இருக்கிறார்கள்? இவர் 2 கோடி உறுப்பினர் என்கிறார். இன்னொருத்தர் 4 கோடி என்கிறார். மற்றவர் 3 கோடி என்கிறார் . இன்னும் கட்சிகள் இருக்கு ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை