உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அகண்ட அமெரிக்கா; வரைபடம் வெளியிட்டு வம்பிழுக்கும் டிரம்ப்!

அகண்ட அமெரிக்கா; வரைபடம் வெளியிட்டு வம்பிழுக்கும் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கனடாவை, அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்ப், அமெரிக்கா, கனடா இணைந்து ஒரே நாடாக இருப்பது போன்ற வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அமெரிக்கா, 50 மாகாணங்களை உள்ளடக்கிய நாடு. இதில், 51வது மாகாணமாக அண்டை நாடான கனடாவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் (தேர்வு) டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0ig3qq5a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தனது விருப்பத்தை நேரடியாக கனடா நாட்டு பிரதமரிடமே தெரிவித்துவிட்டார். அதை, கனடா நாட்டு அரசியல்வாதிகள் யாரும் பொருட்படுத்தவில்லை. என்னிடம் தன் முயற்சியை கைவிடாத டிரம்ப், தொடர்ந்து அதை வலியுறுத்தி சமூக வலை தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.'கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் இருக்காது; வர்த்தகப் பற்றாக்குறை இருக்காது. கனடா பாதுகாப்பாக இருக்கும்' என்ற ஆபரையும் வழங்கி இருந்தார். தற்போது அவர் அமெரிக்கா, கனடா இணைந்து ஒரே நாடாக இருப்பது போன்ற வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.சமீபத்தில், , 'பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், அதனை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும்,'' என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். டிரம்பின் இந்த கூற்றுக்கு பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முனிலோ கண்டனம் தெரிவித்தார். கிரீன்லாந்து, ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள தீவு நாடாகும். அரசியல் ரீதியாக ஐரோப்பாவுடன் இணைந்திருந்தாலும், புவியியல் ரீதியாக கிரீன்லாந்து வட அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்ததாகும்.கிரீன்லாந்து நாட்டிற்கு, சமீபத்தில் உரிமை கொண்டாடினார். கிரீன்லாந்தின் உரிமையும் கட்டுப்பாடும், அமெரிக்காவுக்கு அவசியம் என்று கூறிய டிரம்ப் கருத்து தெரிவித்தார். இதற்கு 'கிரீன்லாந்து எங்களுடையது; விற்பனைக்கு இல்லை' என அந்நாட்டு பிரதமர் மூட் எகெடே திட்டவட்டமாக தெரிவித்தார்.அதை பொருட்படுத்தாத டிரம்ப், தனது மகனை கிரீன்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவர் சென்றபோது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sankaranarayanan
ஜன 08, 2025 18:08

கனடாவை, அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவையும் 52-ஆவது மாகாணமாக இணைத்துக்கொண்டால் இந்தியாவும் முன்னேறும் அமெரிக்காவும் முன்னேறும்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 08, 2025 13:07

சீனா அதிபர் மைன்ட் வாய்ஸ். அய்யோ இதெல்லாம் நம்ம வேலையாட்சே இவனும் உள்ளே வந்துட்டான்னா நமக்கு வேலை இல்லாமே போயிருமே. முஸ்லிம் தீவிர வாதிகள் மைன்ட் வாய்ஸ். என்னடா இது நாமோ என்னமோ திட்டம் போட்டு குண்டு வெச்சு நம்மாளுங்க பத்து பேரை கொன்னு மத்தவன நூறு பேரை கொன்னு கொஞ்ச கொஞ்சமா நாடு சேர்த்தா இவன் வேறே மாத்ரி உள்ள வரான். இங்கிலாந்து இந்தியாவை வளச்சு போடலாம்னு திட்டம் தீட்டி நடந்தா இவனை வேறு எதுக்கோனும் போல் இருக்கே. சரி பார்போம். காலிஸ்தான் மைன்ட் வாய்ஸ். என்னடா இந்த டிரம்ப் நாமே கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நாட்டை புடிச்சு வெக்கலாம்னு ஐடியா பண்ணா இவன் அதை மொத்தமா தூக்கிட்டு போய்ருவான் போல். காலிஸ்தானை காலி பன்னீருவான் போல் இருக்குது.


Natarajan Ramanathan
ஜன 08, 2025 12:06

டிரம்ப் வேண்டுமானால் இந்தியாவை இணைத்துக்கொள்ளட்டும். இங்கே பலரும் அதை விரும்புவார்கள்.


Ramesh Sargam
ஜன 08, 2025 12:00

கனடாவின் ட்ருடோவுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். ட்ரம்ப் இந்தமுறை இதுபோன்ற அடாவடித்தனம் நிறைய செய்வார். அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்சினைகளை உண்டுபண்ணும். அவர் அதிபர் பொறுப்பு ஏற்றவுடன் இப்படியே அடாவடித்தனம் செய்துகொண்டிருந்தால், அவருடைய முழு பதவிக்காலம் முழுவதும் அதிபராக இருக்கமுடியாது. மக்கள் கல்தா கொடுத்துவிடுவார்கள்.


visu
ஜன 08, 2025 16:39

அப்படியெல்லாம் எதுவும் செய்யமுடியாது அவர்கள் கௌரவம் பார்ப்பார்கள் பாலியல் வழக்கில் சிக்கிய கிளிண்டனயே பதவிக்காலம் முடியும் வரை தொடர வைத்தனர் இதோ ஜோ பைடேன் தனது மகனையே மன்னித்து விடுவிக்கிறார் யாரும் அவர் அதிகாரத்தை கேள்விகேட்கவில்லை


Ramesh Sargam
ஜன 08, 2025 12:00

கனடாவின் ட்ருடோவுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். ட்ரம்ப் இந்தமுறை இதுபோன்ற அடாவடித்தனம் நிறைய செய்வார். அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்சினைகளை உண்டுபண்ணும். அவர் அதிபர் பொறுப்பு ஏற்றவுடன் இப்படியே அடாவடித்தனம் செய்து கொண்டிருந்தால், அவருடைய முழு பதவிக்காலம் முழுவதும் அதிபராக இருக்கமுடியாது. மக்கள் கல்தா கொடுத்துவிடுவார்கள்.


Muralidharan raghavan
ஜன 08, 2025 11:53

கனடா தனியாக இருப்பதே நமக்கு நல்லது. ஏற்கனவே அங்கு சீக்கிய தீவிரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களின் வாக்குகளுக்காக கனடா பிரதமர் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நமது உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டார். மேலும் சீக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதற்காக இந்தியா கனடா உறவுகள் பாதித்தது. இந்நிலையில் அமெரிக்காவுடன் அந்த நாடு இணைந்தால் டிரம்ப் நம்நாட்டின் மீது நிர்பந்தம் செலுத்துவார். அது நம்மை பாதிக்கும். தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஆதரித்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. உதாரணம் பாக்கிஸ்தான் வங்கதேசம்


GMM
ஜன 08, 2025 11:52

அகண்ட அமெரிக்கா, பாரதம் மிக அவசியம். சுற்றியுள்ள சிறிய மத, இனவாத நாடுகளால் பாதுகாப்பை உறுதி படுத்த முடியவில்லை. எப்போதும் கலவரம், போராட்டம் நிகழும் சூழல். ஓட்டுக்கு, ஆட்சியில் நிலைக்க தீவிரவாத, கடத்தல்காரர்களுடன் சமரசம் செய்ய வேண்டிய சூழல். கனடா, மெக்ஸிகோ, கிரீன் லேண்ட், பனாமா உள்ளடக்கிய அகண்ட அமெரிக்கா தற்போது அவசியம். வலுவற்ற நாடுகள் தான் தீவிர வாதிகள் புகலிடம். தீவிரவாதம் ஒழியும் வரை நிர்வாக, ஆயுத ஆட்சியும் அமெரிக்காவிற்கு தேவை.


Haja Kuthubdeen
ஜன 08, 2025 22:00

அகன்ட பாரதம்னு ஆப்கானி..பாக்கிஸ்தானி..பங்காளிகளை நம் நாட்டோடடு இணைத்தால் நாடு நாடாக இருக்காது...


Madras Madra
ஜன 08, 2025 11:42

கனடாவுக்கு அதுதான் நல்லது


Haja Kuthubdeen
ஜன 08, 2025 11:29

அடாவடி மனிதர்...பழமைவாதி


வல்லவன்
ஜன 08, 2025 11:22

நீ கலக்கு தல Trump is on fire ?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 08, 2025 14:09

டிரம்ப்ன்னுனா பயர்ன்னு நினைச்சையா வைல்ட் பயர்லே


முக்கிய வீடியோ