உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுக்கு கண்டனம்; தி.மு.க செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மத்திய அரசுக்கு கண்டனம்; தி.மு.க செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும், புயல் நிவாரணத்திற்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.சென்னையில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் பின்வருமாறு:

ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டாம்

* பார்லிமென்டில் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம். * பேரிடர் நிதியை மத்திய அரசு ஒதுக்காமல், தமிழக மக்களை வஞ்சிப்பதற்கு கண்டனம். .* தமிழக அரசு கோரிய ரூ.6,675 கோடி நிவாரண நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் .* ஜனநாயகத்துக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தல் .* பெஞ்சல் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு. * பெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு, தமிழகத்திற்கு போதுமான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். * 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற இன்றே புறப்படுவீர். தி.மு.க., அரசின் சாதனைகளை போர்ப் பரணி பாட வேண்டும் . * தமிழகத்தில் கல்வித் துறைக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கண்டனம். * கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை பேரறிவுச் சிலையாக போற்ற வேண்டும். * மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதற்கு கண்டனம். * கனிம சுரங்கச் சட்டத்தை ஆதரித்த அ.திமு.க.,வுக்கு கண்டனம். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம். * இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Bharathi
டிச 23, 2024 01:08

பேனர்ல உதவாநிதி போட்டோ சேர்க்காததுக்கு ஒரு கண்டனம்


Uuu
டிச 22, 2024 20:25

Unwanted government


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 20:00

செயற்குழு எதற்காக ???? வரப்போகும் ஒரு ஆண்டில் ஆட்சியில் இருக்கப்போகும் கட்சி என்ன செய்வதாக உத்தேசம் ????


Gokul Krishnan
டிச 22, 2024 16:11

3 மாதங்களில் இடிந்து விழுந்த பாலம் கட்டுவதற்கு காரணமாக இருந்த எ மா வேலுவிற்கு பாராட்டி ஒரு தீர்மானம் 4000 கோடியில் சென்னையில் வெள்ளத்தை தடுத்த துறை முருகனுக்கு ஒரு பாராட்டு பள்ளியில் ஆசிரியைக்கு வெட்டு மருத்துவமனையில் டாக்டருக்கு வெட்டு நீதிமன்றத்தில் வக்கீலுக்கு மட்டும் ஆஜர் படுத்த வந்த கைதிக்கு வெட்டு ஆக காவல் துறைக்கு ஒரு பாராட்டு கேரள குப்பையை நெல்லையில் கொட்ட அனுமதித்த சோதனை சாவடி காவல் துறைக்கு ஒரு பாராட்டு இது எல்லாம் மிஸ்ஸிங் தல


Suppan
டிச 22, 2024 15:54

இந்தத் தீர்மானங்களை தயிர் வடையையும் சேர்த்து சமாதியில் வைத்து பஜனை செய்யவும். பிறகு குப்பைத்தொட்டியில் போடவும்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 22, 2024 15:54

திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவரின் தந்தையும் முதலமைச்சருமான மாண்புமிகு திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வைத்த பரீட்சையில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதற்கு பாராட்டு எனும் இந்த தீர்மானம் விடுபட்டுவிட்டது. சேர்த்து கொள்ளவும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 14:52

உன்னோட முப்பத்தொன்பது உருப்படிங்க மக்களவை போயி என்ன பண்ணுறாங்க ன்னு கேட்டா மத்திய அரசுக்கு கண்டனம் ன்னு சொல்ற .....


ghee
டிச 22, 2024 14:32

அடடே அண்ணனுக்கு எவளோ பைசா அறிவு சொல்ல தோணுது


nv
டிச 22, 2024 14:24

வெறும் வெத்து தீர்மானங்கள்!!


ஆரூர் ரங்
டிச 22, 2024 14:18

சனாதனத்தை ஒழிக்க முதல்படியாக வைணவ ஜீயர்கள விழுந்து வணங்கிய சின்னவரை வணங்கும் தீர்மானம் நிறைவேற்றி மகிழுங்கள்.


புதிய வீடியோ