உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டன் திட்டம் வராது: போராட்டத்தை கைவிட அண்ணாமலை கோரிக்கை

டங்ஸ்டன் திட்டம் வராது: போராட்டத்தை கைவிட அண்ணாமலை கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : '' மதுரையில் ஒரு போதும் டங்ஸ்டன் திட்டம் வராது. போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வள்ளாலபட்டி கிராமத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை தமிழக பா.ஜ., தலைவர் சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: இரண்டு நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தீர்கள். பொதுச் சொத்துக்கு ஒரு பைசா சேதம் இன்றி 16 கி.மீ., பேரணி நடந்தது. இங்கு அரசியல் பேச மாட்டேன். தி.மு.க., பா.ஜ., என பேச மாட்டேன். மத்திய, மாநில அரசுகள் என சொல்வேன். பல்லுயிர் தளம், கிராமப்பகுதி, விவசாய நிலம் வேண்டாம் என சொன்னீர்கள். அதனை ஏற்றுக் கொண்டோம். பிறகு, எங்கேயும் டங்ஸ்டன் வேண்டாம் என சொன்னீர்கள். அதனை ஏற்றுக் கொண்டோம். மதுரையில் டங்ஸ்டன் திட்டம் ஒரு போதும் வராது. மத்திய அமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக பேசி உறுதி அளிக்கிறேன். இங்கு சில இயந்திரங்கள் உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வருவார். வந்து டங்ஸ்டன் திட்டம் வராது எனக்கூறுவார். அதன் பிறகு அந்த இயந்திரங்கள் இங்கிருந்து சென்றுவிடும். இங்கு அனைத்துக் கட்சி தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்ப்பாட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஜன 11, 2025 17:09

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பது போல் இந்த விஷயத்தில் அண்ணாமலை தமது சாதனையாக காட்டிக் கொள்ளும் முயற்சி!


ஆரூர் ரங்
ஜன 11, 2025 14:24

திட்டம்? வரும். ஆனா வராது.


Kasimani Baskaran
ஜன 11, 2025 07:59

தொழில்கள் வளர்வதன் மூலம் அந்த பகுதியின் பொருளாதாரம் மேம்படும். பணப்புழக்கம் மற்றும் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். தமிழனை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பதில் அண்ணாமலை உட்பட பலர் முனைப்புடன் செயல்படுகிறார்கள். அடுத்த பத்தாண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு தீம்க்கா குடும்பம் அல்லது அதன் பினாமிகள் நடத்தும் தொழில்களிலேயே வேல செய்பவர்களாக இருப்பார்கள். அனைத்துத்தொழில்களும் தீம்க்காவில் கள்ளப்பணத்தால் வாங்கப்படும்.


Mani . V
ஜன 11, 2025 05:49

இவரே சொல்லிட்டாரா? அப்ப வராது. ஆமா, இவர் என்ன மத்திய மந்திரியா?


J.V. Iyer
ஜன 11, 2025 04:43

வேண்டும் என்று கையெழுத்து போட்டுவிட்டு, பிறகு வேண்டாம் என்று சொன்னது இந்த மாடல் ஆட்சிதானே? இப்படித்தான் நீட் போன்ற எல்லா புரட்டுக்களும். திராவிட பொய்யும், புரட்டும் ஏன் இந்த தமிழக மக்களுக்கு தெரியவில்லை?


அப்பாவி
ஜன 10, 2025 22:39

வராதுன்னு சொல்ல இவரு யாரு ஐயா? ஒரு கவுன்சிலராகக் கூட இல்லை.


AMLA ASOKAN
ஜன 10, 2025 21:50

அண்ணாமலை எப்பொழுது மத்திய அமைச்சரானார் . உறுதியான அரசுதிட்ட அறிவிப்பை வெளியிடுகிறார் . கூட்டத்தை பார்த்ததால் பொங்கி விட்டார் போல .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 21:11

உங்களுக்கென்ன ...... சொல்ட்டீங்க ..... பல அவலங்களை திசைதிருப்ப வேண்டியிருக்குதே ????


தாமரை மலர்கிறது
ஜன 10, 2025 20:56

அரியவகை கனிமம் டங்ஸ்டன் சுரங்கம் கண்டிப்பாக மதுரைக்கு வரும். மத்திய அரசு ஏற்கனவே அனுமதி தந்துவிட்டது. எந்த கொம்பனாலும் இதை தடுக்க முடியாது. அனாவசியமாக போராடி பொதுச்சொத்துக்களை நாசப்படுத்துவதோடு, தமிழகத்திற்கு கெட்டபெயர் வாங்கித்தரக்கூடாது. டங்ஸ்டன் உற்பத்தி இந்தியாவிற்கு அவசியம். வேறு யாராவது டங்ஸ்டன் தயாரிப்பார்கள். நாம் மல்லாக்கப்படுத்துக்கொண்டு உபயோகப்படுத்துவோம் என்று அசட்டுத்தனமாக இருக்கமுடியாது. சீனாவுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்கும் கம்யூனிஸ்ட்காரர்களின் முட்டி உடைக்கப்படும். தூத்துக்குடி போன்று இன்னொரு சம்பவம் நிகழும்.


குமார் மதுரை
ஜன 10, 2025 20:39

ஸ்டாலின் வந்து சொல்ல வேண்டியது தானே இங்கு டங்ஸ்டன் வராது என்று. ஸ்டாலின் வந்திருந்தா எதுக்கு அண்ணாமலை வரப்போறார்? நமக்கு மேக்கப் போடவும் விக் வக்கவுமே நேரமில்லை, அப்புறம் துண்டுச் சீட்டை மனப்பாடம் பண்ணனும். கருமம் தமிழ் நாட்டோட தலை எழுத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை