உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்து வழக்கில் திருப்பம்; திட்டமிட்டு கார் ஏற்றிய திமுக சேர்மன் கொலை வழக்கில் கைது

விபத்து வழக்கில் திருப்பம்; திட்டமிட்டு கார் ஏற்றிய திமுக சேர்மன் கொலை வழக்கில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: மக்களுக்கு பயன்பாடில்லாத ரோடு குறித்து புகார் மனு அளித்தவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பேரூராட்சி சேர்மன் (திமுக) கைது செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தில் மொபட்டில் சென்ற பழனிசாமி 57, கார் மோதிய விபத்தில் இறந்தார். இதைப்பார்த்த பலரும், சாலையில் அஜாக்கிரயால் ஏற்பட்ட விபத்து என்றே கருதினர். போலீசாரும் அப்படியே நினைத்தனர்.ஆனால், விசாரணையில் அதிர்ச்சியான விஷயங்கள் வெளியாகின. போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர், சாமளாபுரம் பேரூராட்சி தி.மு.க., சேர்மன் விநாயகா பழனிசாமி, 60, என்று தெரியவந்தது. அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.அதன்பிறகு இன்னொரு அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியானது. இறந்த பழனிசாமி, மக்களுக்கு பயன்பாடில்லாத, தனியார் இடத்தில் போடப்பட்ட ரோடு தொடர்பாக கலெக்டரிடம் பேரூராட்சி நிர்வாகம் மீது புகார் கொடுத்துள்ளார். இதனால், சேர்மன் விநாயகா பழனிசாமிக்கும், இறந்து போன பழனிசாமிக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.இதன் காரணமாகவே, மது போதையில் இருந்த சேர்மன், காரை ஏற்றி கொன்றது தெரியவந்தது. இதை உறுதி செய்த மங்கலம் போலீசார், பேரூராட்சி சேர்மனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

திகழும் ஓவியம், Ajax Ontario
செப் 12, 2025 07:41

உச்ச மன்றம் அவரை ஒடனே விடுவித்து மறுநாளே அமைச்சர் பதவி ஏற்க உத்தரவிடும்...அருமை


Padmasridharan
செப் 12, 2025 05:56

"இதைப்பார்த்த பலரும், சாலையில் அஜாக்கிரயால் ஏற்பட்ட விபத்து என்றே கருதினர். போலீசாரும் அப்படியே நினைத்தனர்".. பார்த்தா காக்கி சட்டை நிஜமாவே பாதுகாக்கற மாதிரியும் மக்கள்தான் ஏதோ தவறு செஞ்ச மாதிரியும் இருக்கும் சாமி. இல்லாதத இருக்கிற மாதிரி காட்டி பணத்தை அதிகார பிச்சையெடுப்பதுதானே இவங்களுக்கு வழக்கம். உண்மையான விசாரணை நடந்தால் பல உண்மைகளும் வரும்


jai
செப் 11, 2025 19:13

நாளைய செய்தி. திமுக சேர்மனை கைது செய்த போலீஸ் ஆயுதப் படைக்கு மாற்றம் கைதான திமுக சேர்மனுக்கு ஜாமீன். திமுக காரன்னா நகை ஜாக்கிரதை கிட்னி ஜாக்கிரதைன்னு சொல்லியது போய் இனி உயிரையும் பத்திரமாக பார்த்துக்கனும் போல...


நிக்கோல்தாம்சன்
செப் 11, 2025 19:00

மூஞ்ச பாருங்க , கட்சி கொடி மாதிரியே இருக்கு


D.Ambujavalli
செப் 11, 2025 18:22

‘ஐயோ, நான் கூட பட்டா மாற்ற லஞ்சம் கேட்கிறார் என்று புகார் அனுப்பி விட்டேன், என்றைக்கு என் மேல் கார் ஏறுமோ, லாரி ஏறுமோ என்று மனு கொடுத்த ஒவ்வொருவரும் தினம் தினம் நடுங்கிக்கொண்டே எழுந்திருக்க வேண்டும். வெளியே, தெருவில் நடமாட முடியாது.மணல் கொள்ளையை கண்டித்தவருக்கு உடனடி கொலை. சபாஷ்! எந்தக் கொம்பனாவது குறை சொல்லிப் பார்க்கட்டும், இதே கதிதான்.திராவிட மாடலாக்கும்...


T.Senthilsigamani
செப் 11, 2025 16:19

இந்த திமுக சேர்மன் பெரியாரின் பேரனா ? கோட்சேயின் பேரனா ? தெரிந்தவர்கள் சொல்லலாம். மேலும் இந்த சேர்மன் சனாதன வாதியா ? திராவிட பகுத்தறிவு பாசறை ஆளா ? சொல்லுங்கள் போலி மத ச்சார்பின்மை கூட்டங்களே


Perumal Pillai
செப் 11, 2025 16:03

திமுக காரனால் மக்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை .


sivabalan
செப் 11, 2025 14:41

திமுக காரன்னா நகை ஜாக்கிரதை கிட்னி ஜாக்கிரதைன்னு சொல்லியது போய் இனி உயிரையும் பத்திரமாக பார்த்துக்கனும் போல...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 11, 2025 14:05

2026 சட்டசபை தேர்தலில் சீட் கன்பார்ம்..... திமுகவின் மந்திரியாகும் பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கு.....இவரை கண்ணை மூடிக்கொண்டு ஜெயிக்க வைப்பார்கள் தமிழக மக்கள்....!!!


Arjun
செப் 11, 2025 13:43

மற்றொரு அணி ரெடி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை