| ADDED : செப் 08, 2011 11:04 PM
தூத்துக்குடி: டில்லியில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயமடைந்த, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக அதிகாரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இத்துறைமுக மேற்பார்வை பொறியாளராக(சிவில்) பணியாற்றியவர் பத்ரன்(57). இவர் துறைமுக வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக, நேற்று டில்லி ஐகோர்ட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பயங்கரவாதிகள் வைத்த குண்டுவெடித்ததில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து, அங்குள்ள ஆஸ்பத்திரியில் இவரது காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. குணமடைந்து வந்த இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, காலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியது. உடல் நிலை மோசமானதையடுத்து, மாலை 6.45 மணியளவில் பத்ரன், சிகிச்சை பலனின்றி இறந்தார். இத்தகவல் துறைமுகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இவரது மனைவி வடிவுராணி, டில்லியில் உள்ளார். மகன் பிலிப் சந்தோஷ்குமார், துறைமுக அதிகாரிகள் டில்லி செல்கின்றனர். டில்லியில் இருந்து விமானம் மூலம் இவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலஸ்சில் தூத்துக்குடி கொண்டுவரப்படுகிறது