உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் நேற்று சொன்னதும்... ரசிகர்கள் இன்று செய்ததும்!!

விஜய் நேற்று சொன்னதும்... ரசிகர்கள் இன்று செய்ததும்!!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம்: மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்திய 12 வழிகாட்டு நெறிமுறைகளை ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.மக்கள் சந்திப்பு பயணத்தின் போது தனது வாகனத்தை யாரும் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர வேண்டாம், வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம், குழந்தைகள், முதியவர்கள், பள்ளி செல்லும் சிறுவர்கள், நிகழச்சியை தவிர்க்க வேண்டும், வீட்டில் இருந்தபடி நேரலையில் காண வேண்டும், மரங்களில் ஏற வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்து இருந்தார்.தனது இந்த 12 வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருந்தார். இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். நாகையில் இன்று சுற்றுப்பயணம் செய்த போது ரசிகர்கள் ஆரவாரமாய் திரண்டு வந்தேதே அதற்கு சாட்சிவிஜய் பயணம் செய்த பிரசார பஸ்சின் பின்னாலும், அதன் பக்கவாட்டிலும் இளைஞர்கள், ரசிகர்கள் ஓடிக்கொண்டே இருந்தனர். ஒரு பக்கம் ஓட்டம், மறுபக்கம் ஆட்டம் அப்படியே செல்பி என்று ரசிகர்கள் ஆர்வம் நேரம் போக போக அதிகமாகி கொண்டே போனது.பஸ்சை பின்தொடர்ந்து பைக்குகளில் ரசிகர்கள் பட்டாளம் ஜேம்ஸ் பாண்ட் கணக்காய் பறந்து பாய்ந்து வந்தது தனிக்கதை. அதிலும் பக்கவாட்டு கண்ணாடிகளில் கைகளை இரு கண்களின் பக்கவாட்டில் குவித்து வைத்து, உள்ளே என்ன இருக்கிறது, விஜயுடன் வேறு யாரேனும் வந்திருக்கிறார்களா என்று உற்று பார்த்த ரசிகர்களின் டெக்னிக் தனி ரகம்.நாகை புத்தூர் அண்ணாதுரை சிலை பகுதியில் திரண்டிருந்த ரசிகர்கள் + தொண்டர்கள் ஆர்வமும், மகிழ்ச்சியும் தாளாமல் அருகில் உள்ள உயரமான கட்டடங்களில் குதியாட்டம் போட்டனர். இவர்கள் தவிர, பலரும் அருகில் உள்ள மற்ற கட்டடங்கள், வீடுகளின் மேற்கூரையில் ஏறி, எவ்வித பாதுகாப்பின்றி கூட்டமாக நின்று கைகளை ஆட்டி உற்சாகமாக ஆரவாரமிட்டனர். சிறுவர்கள், சிறுமியர்களை சிலர் தங்களின் தோள்களில் உட்கார வைத்து ஆட்டம் போட்டனர். அந்த சிறுவர்களும் கட்சிக் கொடியை கழுத்தில் சுற்றியபடியும், கைகளால் தலைக்கு மேலே விசிறியபடியும் இருந்தனர். எங்களுக்கும் இடம் கிடைக்காதா என்று எண்ணிய விவரமான ரசிக கண்மணிகள் பல அடி உயரம் கொண்ட கட் அவுட்களில் பகீர பிரயத்தனம் செய்து ஏறினர். பின்னர் அதன் வழியே விஜயை நோக்கி கைகளை காட்டினர். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிரம்பி வழிந்தபடி இருக்கே, போலீசார் எங்கே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. என்னதான் ஆரவாரம், கொண்டாட்டம், உற்சாகம் என்று எத்தனை வார்த்தைகளில் ரசிகர்கள் மாஸாக வர்ணித்தாலும், பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும் என்பதே அரசியல் பேசுவோரின் வாய்ஸாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ems
செப் 21, 2025 20:53

காங்கிரசுக்கு இடதுசாரி வலதுசாரி கட்சியை பிடிக்காது, திமுகவிற்கு எந்த ஒரு கட்சியையும் பிடிக்காது, திரிணமுல் கட்சிக்கு காங்கிரசு, இடதுசாரி வலதுசாரி கட்சியை பிடிக்காது.... ஆன இப்போ எல்லாரும் ஒண்ணா இண்டி கூட்டணி


உண்மை
செப் 20, 2025 19:04

தங்களின் கருத்து மிகவும் உண்மை. இவர்கள் நடவடிக்கைகள் பார்ப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இப்போதே இந்த ஆட்டம் ஆடினால் தேர்தலில் தொகுதிகளில் வெற்றி பெற்றால் மக்களுக்கு எதிர்காலம் அச்சுறுத்தலாக அமையும் என்பதில் ஐயமில்லை. அரசியல் தலைவர்கள் கூட்டம் கூட்டுவதில் ஆர்வம் காட்டாமல் தொண்டர்களுக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுங்கள். நான் கட்சி சாராத பொது ஜனத்தில் ஒருவன். திரு.அண்ணாமலை ஐ.பி.எஸ் பயணம் மேற்கொண்ட போது ஒரு ஒழுக்கத்தை காண முடிந்தது. அவருக்கு பின்னால் முன்னால் சென்ற தொண்டர்கள் விசில் அடிக்கவில்லை,கட்சிக்கொடிகளை தலையில் கட்டவில்லை,பொதுமக்களையும் பத்திரிக்கையாளர்களையும் அச்சுறுத்தவில்லை. கூட்டம் கடந்து சென்ற பிறகு ஒரு குழு தூவப்பட்ட மலர்கள்,காலி வாட்டர் பாட்டில்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்துவதை பார்த்து வியந்தேன். அனைத்து அரசியல் தலைவர்களும் இதைப்பின்பற்றினால் ஓட்டு வங்கியை அதிகரிக்க முடியும்.


Ramanujam Veraswamy
செப் 20, 2025 18:27

Crowd management is the duty of Law Enforcing Agrncy I.e., District Administration snd Police. But putting responsibility to VTK is questionable.


chinnamanibalan
செப் 20, 2025 17:54

கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, கற்பூரம் காட்டி மகிழும் கூட்டம் இது. கட்டுக்கோப்பை இதனிடையே எதிர்பார்க்க இயலாது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் நடைபெறும் அவலம் இது. இதை அவ்வளவு எளிதில் ஒழித்து விட முடியுமா என்ன?


Madras Madra
செப் 20, 2025 17:18

சினிமாக்காரன் என்ற மோகம் மட்டுமே இந்த கூட்டத்துக்கு காரணம் என்று சொல்ல முடியாது புதிய தலைமுறையினருக்கு பழைய தலைமுறை கட்சிகளை பிடிப்பதில்லை இதற்க்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்றும் இல்லை தலைமுறை மாற்றம் அவ்வளவே


Mr Krish Tamilnadu
செப் 20, 2025 15:24

செய்தி நிறுவனங்களும் நடைமுறை சிக்கலை புரிந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் மூன்று விதமானவர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள், தொண்டர்கள், பொது மக்கள். தொண்டர்களுக்கு மட்டுமே அன்பு வேண்டுகோள் தலைவரால் விடுக்க முடியும். மற்றவர்களை ஒழுங்குப்படுத்துவது காவல்துறையே சாரும். அங்கீகாரம் தமிழகம் முழுக்க தனக்கு இருக்கிறது. தனக்கு மக்கள் பேரலை எழும் என நிரூபித்து வருகிறார் த.வெ.க தலைவர். இனி ஒழுங்கு படுத்தும் நடவடிக்கை காவல்துறை கையில் தான். அதுவுமில்லாமல், பொதுமக்களுக்கு நேரடி தொந்தரவு த.வெ.க தொண்டர்களால் ஏற்பட்டால் மட்டுமே, விஜயும் கடுமையாக அவர்களிடம் கூற முடியும். சொந்த ரிஸ்க் எடுப்பவர்களை ஒரளவுக்கு தான் கட்டுப்படுத்த முடியும். தொண்டர்களும் இந்த உற்சாகத்தை, விசுவாசத்தை, அன்பின் வெளிப்பாட்டை தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பில் காட்டினால் பலன் கொடுக்கும். நாளைய தீர்ப்பு முதல் ஜனநாயகம் வரை கடந்து வந்த பாதை, தற்போதைய பயணம் கூறி மக்கள் செல்வாக்கு பெற்றால் தவெக லட்சியம் அடையும்..


Oviya Vijay
செப் 20, 2025 14:34

பேராசையுடன் காத்திருக்கும் சங்கிகளுக்கு 2026 தேர்தலில் அவர்கள் அடையப்போகும் தோல்வியைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை அவர்களுக்குக் கொடு ஈஸ்வரா, இயேசுவே, அல்லாவே...


Shekar
செப் 20, 2025 16:05

நீ உபியா?, அணிலா? ஏதாவது ஒரு இடத்தில் நில். விஜய் ஆப்பு அடிப்பது, விடியலின் சிறுபான்மை வாக்கு வங்கியில். விடியல் எய்த அம்பு விடியலையே பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டது.


HoneyBee
செப் 20, 2025 16:28

ஆமாம். இந்த அணில் குஞ்சுகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது. சந்து பொந்துகளை தேடி குடித்து கும்மாளம் போட்டுட்டு இருக்கும் கூட்டம். எல்லாம் ஓட்டா மாறுமா


R.MURALIKRISHNAN
செப் 20, 2025 14:28

நடிகனை நம்பாதே தமிழா நடிகனை நம்பாதே


Moorthy
செப் 20, 2025 14:18

சின்ன புள்ளைங்க அப்டித்தான் , விடுங்க


பெரிய குத்தூசி
செப் 20, 2025 14:13

டுமீலக இளைஞர்கள் கூமாபட்டி யூtube பிரபலம் வந்தாலும் இப்படி பண்ணுவானுக. வேலை வெட்டி இல்லாம இவோலோ பேரு தமிழ்நாட்டுல இருக்கானுங்க. மத்த ஸ்டேட் ல சினிமா கூத்தடிகளு இவளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. டுமிழக இளைஞர்கள் உருப்பட வாய்ப்பே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை