வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அடுத்த சம்பவத்துக்கு 28 பேர் தலைமறைவாக வேண்டும் என்று நினைக்கிறேன்
சென்னை: தவெகவின் அன்றாட பணிகள், செயல்பாடுகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழுவை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.கரூர் துயரம் தவெகவின் அண்மைக்கால செயல்பாடுகளை முடக்கியதாக பேச்சுகள் உண்டு. 41 பேர் உயிரிழந்த தருணத்தில் அடுத்து மேற்கொள்ளவேண்டியவை என்ன என்பது பற்றிய வழிகாட்டுதல்கள் இல்லாமல் கட்சியின் நிர்வாகிகள் குழம்பி போயினர்.கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை வரவழைத்து சந்தித்த விஜய் அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வாக்குறுதி அளித்தார்.இந் நிலையில் கட்சியின் அன்றாட செயல்பாடுகள், பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக் குழு ஒன்றை விஜய் இன்று (அக்.28) அறிவித்துள்ளார். தமது வழிகாட்டுதல் படி இயங்கும் இந்த புதிய குழுவுக்கு அனைவரும் ஒத்துழைய்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த பட்டியலில் மொத்தம் 28 பேர் இடம்பெற்றுள்ளனர். பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரும் இந்த குழுவில் உள்ளனர்.முக்கிய நிர்வாகிகளான இவர்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்களின் செயலாளர்களும், உறுப்பினர்களாக உள்ள இருவரும் நிர்வாகக்குழு பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
அடுத்த சம்பவத்துக்கு 28 பேர் தலைமறைவாக வேண்டும் என்று நினைக்கிறேன்