உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க.,வில் அடுத்த அதிரடி...! விஜய் செஞ்சுரிக்கு காத்திருக்கும் நிர்வாகிகள்

த.வெ.க.,வில் அடுத்த அதிரடி...! விஜய் செஞ்சுரிக்கு காத்திருக்கும் நிர்வாகிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளில் நடிகர் விஜய் இறங்கி உள்ளார். தான் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி பணிகளில் நடிகர் விஜய் தீவிரமாக இறங்கி இருக்கிறார். தி.மு.க., பா.ஜ., ஆகிய கட்சிகளை ஒரே நேரத்தில் அட்டாக் செய்து தமது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள அவர், அடுத்த கட்டமாக கட்சியை பலப்படுத்தவும், அதிக உறுப்பினர்களை சேர்க்கவும் நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார்.முழுமையான அதே நேரத்தில் தீவிரமான அரசியல் பணியில் இறங்கி உள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்த முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சியை போலவும், மாவட்ட செயலாளர்களை நியமித்து வலுவான கட்டமைப்பை கட்டமைக்க முடிவு செய்துள்ளார் என்று நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.இதுகுறித்து அவர்கள் மேலும் கூறி இருப்பதாவது; கட்சியை ஆரம்பித்து, தமது இலக்கை அறிவித்துள்ள நடிகர் விஜய் அதை நோக்கி ஸ்பீடாக நகர ஆரம்பித்துள்ளார். அதற்காக கட்சியில் அமைப்பு ரீதியாக மாவட்டச் செயலாளர்களை நியமிக்க முடிவு எடுத்துள்ள அவர், அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார்.அதில் முக்கிய கட்டமாக, மாவட்டச் செயலாளர்கள் நியமனம் இருக்க போகிறது. ஒவ்வொரு மாவட்டம் தோறும், தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை கூட்டி, கருத்துக் கேட்பு பணிகளை துவங்க உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகளும் வேகம் எடுத்துள்ளன.மாவட்ட வாரியாக நிர்வாகிகளை கூட்டி, ஒன்றியம், பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் தலைவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. அவர்களின் கருத்துகள்,எதிர்பார்ப்புகள், பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதில் ஒரு முக்கிய விஷயத்தை நடிகர் விஜய் கையாள்கிறார். தமது தீவிர ரசிகராகவும், விஜய் மக்கள் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கும் முக்கியத்துவம் தர இருக்கிறார். அவர்களை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் விதமாக, பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்களை மக்கள் இயக்கத்தில் உள்ள விசுவாசிகளுக்கு அளிக்க எண்ணி உள்ளார்.மற்ற கட்சிகளை போல மாவட்டம் வாரியாக செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். மொத்தம் 100 மா.செ.,க்கள் முதல் கட்டமாக நியமிக்கப்படக்கூடும். சட்டசபை தொகுதிகள் வாரியாக, அந்த பட்டியலை தயாரிக்கும் பணிகளும் ஏற்கனவே தொடங்கி, பட்டியலும் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது.தற்காலிகமாக ரெடியாகி உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் சமகால செயல்பாடுகள், மாவட்ட அளவில் கட்சியில் அவர்களின் ஒருங்கிணைப்பு பணிகள், மாற்று கட்சியினரிடம் அவர்களின் அணுகுமுறை, கட்சியின் கடைக்கோடி தொண்டர்களை நடத்தும் விதம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.அதே நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக திட்டமிட்டு வைத்துள்ள எதிர்கால பணிகள் அல்லது செயல்பாடுகள் பற்றியும் விரிவாக கேட்டு தெரிந்து கொள்ளவும் நடிகர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வளவு அஜாக்கிரதையாகவும், அசாதாரணமாகவும் கட்சி பணிகளில் இறங்கக்கூடாது, கட்சிகளில் அரவணைப்பும், அதே நேரத்தில் அதீத அரசியல் செயல்பாடுகளும் முக்கியம் என அவர் எதிர்பார்க்கிறார். அவரின் எண்ணங்களுக்கு ஏற்க நாங்கள் செயல்பட தயாராகி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நியமன விவகாரத்தில் நடிகர் விஜயின் நடவடிக்கைகளையும் அரசியல் நிபுணர்கள் உற்று நோக்கி வருகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறி உள்ளதாவது: தாம் யாரை எதிர்க்கிறோம் என்பதை பட்டவர்த்தனமாக அறிவித்து விட்டு அரசியல் களத்தில் நடிகர் விஜய் களம் இறங்கி இருக்கிறார். அரசியல் சூது அவ்வளவு எளிதானது அல்ல, மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டும். அதை எல்லாம் தெள்ளத் தெளிவாக உணர்ந்து, புரிந்து அதற்கேற்ப செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்று சொல்லலாம். அதன் முன்னோட்டமாக 100 மா.செ.,க்கள் என்ற பிளானை விரைவில் எதிர்பார்க்கலாம். கட்சிக்குள் நிர்வாகிகள் நியமனம் மற்றும் அதன் அறிவிப்பை தொடர்ந்து எழும் பூசல்கள் தான் கட்சியில் தற்போதைய நிதர்சனம் என்ன என்பதை வெளிப்படுத்தும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Sivasankaran R
நவ 23, 2024 18:51

நடிகர்கள் அரசியலை வியாபாரமாகத்தான் செயல்படுத்துகிறார்கள் ....


Sivasankaran R
நவ 23, 2024 18:12

தமிழர்கள் திராவிடர்கள் அல்ல என்பதுதான் உண்மை


Sivasankaran R
நவ 23, 2024 18:07

தமிழகத்தில் திராவிடம் என்ற சொல் உள்ளவரை விஜய்யின் அரசியல் செயல்பாடு எல்லாம் கானல் நீர்தான்.அரசியல் செய்வதை விட்டு வேறு வழியில் சமூக தொண்டாற்றலாம் .


Ramesh Sargam
நவ 23, 2024 12:45

100 மா.செ.,க்கள், மற்றும் பல பல பதவிகள் கட்சியில். அவர்கள் கட்சிக்காக காசு எதுவும் வாங்காமல் பணியாற்றுவார்களா, அல்லது விஜய் அவர்களுக்கு ஏதாவது பணஉதவி செய்வாரா?


Sivasankaran R
நவ 23, 2024 18:54

கமலஹாசனைப்போல அரசியலை வியாபாரமாக்க வேண்டாம்


Kasimani Baskaran
நவ 23, 2024 12:33

பொறகு எதுக்கு ராமசாமியின் கொள்கைகளை திருடுறாராம்? நீட்டை ஏன் எதிர்க்க வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 23, 2024 14:46

ராமசாமியின் கொள்கைகள் அனைவருக்கும் பொதுவானவை. யார் வேண்டுமானாலும் படிக்கலாம், பின்பற்றலாம், விமர்சிக்கலாம், தூர எறியலாம். விஜய் மட்டுமல்ல, யாரையும், ராமசாமியின் கொள்கைகளை திருடுறார் என்று சொல்வது தவறு.


Rajarajan
நவ 23, 2024 11:37

எந்த அரசியல் ஆளும் கட்சியும், எதிர் கட்சியும், ஆள துடிக்கும் கட்சியும், கூட்டணி கட்சியும், அள்ளகைகளும், அனுதாபிகளும், கடைசிவரை தமிழகத்தின் தற்போதைய கடன்சுமை / எதிர்கால கடன் சுமையை தீர்க்கும் பொறுப்பை மட்டும் எடுத்து பேசவே மாட்டேங்கறாங்களே. பிறகு, ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன, எனக்கொரு கவலை இல்ல.


Yasararafath
நவ 23, 2024 10:23

தமிழகத்தில் மக்கள் ஆட்சி வந்தால் மட்டும் தான் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும்.


selva kppk
நவ 23, 2024 10:15

இந்த யூடியூப் சேனல் மற்றவற்றிலிருந்து வேறுபட்டது என்றும் நம்முடைய பெரியாரிஸ்ட் சித்தாந்தங்களுடன் இணைந்தது என்றும் நாம் அனைவரும் நினைத்தோம். ஆனால் நாம் மிகவும் தவறு செய்கிறோம். இந்த யூடியூபரை சகோதிரி என்று அழைத்து அன்பைப் பொழிந்தோம். ஆனால் அவர் பெரியாரிஸ்ட் இல்லை. கடைசியாக avar கருத்தைப் பாருங்கள் 4.50-5.15 அவரால் மதத்தை தாண்டி அதன் எல்லைக்கு அப்பால் சிந்திக்க முடியாது.


sanjai
நவ 23, 2024 10:13

dmk or admk தான் மாறி மாறி வரும்.. இதை தவிர வேறு யாருக்கும் மக்கள் ஆட்சி வாய்ப்பை வழங்கமாட்டார்கள்


நிக்கோல்தாம்சன்
நவ 23, 2024 09:58

விஜய் ஒரு நடிகர் , யாரோ எழுதி கொடுப்பதை உள்வாங்கி நடிப்பதில் கைதேர்ந்த விட்டார் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை