உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் நடிகர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு!

சென்னையில் நடிகர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு!

சென்னை; சென்னையில், நடிகர் விஜய்யை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசி உள்ளது, அரசியல் களத்தை பரபரப்பாக்கி இருக்கிறது. தமிழக அரசியல் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. 200 தொகுதிகள் இலக்கு என்று தி.மு.க., தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது. வலுவான கூட்டணியை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று அ.தி.மு.க., கூறி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ddwqou7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02026 தேர்தல் களத்தில் புதிய கட்சியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் பங்கேற்கிறது. அதற்கான முஸ்தீபுகளை முன்பே தொடங்கிவிட்ட நடிகர் விஜய், தற்போது ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார். அண்மையில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகளையும் அளித்தார்.அதே நேரத்தில் அ.தி.மு.க., கூட்டணிக்குள் த.வெ.க.,வை கொண்டு வரவேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந் நிலையில், நடிகர் விஜய்யுடன் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு நிகழ்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் இந்த முக்கிய சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.சந்திப்பை கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்ததாகவும், சந்திப்பின் போது அவர் உடன் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்தும் இருதரப்பு பேசியதாகவும், கூட்டணி மற்றும் தேர்தல் செயல்திட்டம் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.இந்த முக்கிய சந்திப்பின்போது, த.வெ.க., அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் கலந்து கொண்டுள்ளார் என்றும் தெரிகிறது. தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்துக் கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர், கடந்தாண்டு ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Ramaswamy Jayaraman
பிப் 11, 2025 12:10

பிரசாந்த் கிஷோர் கட்சி ஆரம்பித்து தோற்றுபோனவர். அவரை எப்படி இனிமேல் நம்பமுடியும். அவருடைய தேர்தல் வியூகம் அவருக்கே வேலை செய்யவில்லை. மற்றவர்களிடம் இருந்து பணம் எடுப்பது எப்படி என்று நன்றாக தெரிந்தவர். ஆனால் அரசியல் வாதியாக தோற்றவர். நம்பாதீர்கள்


Madras Madra
பிப் 11, 2025 11:20

கட்சி தொடங்கி இவ்வளவு சீக்கிரம் இவ்ளோ பெரிய ஆளை பிடிக்கிறார்கள் பல நூறு கோடி சம்பளம் தரணும் இவ்வளவு பணம் செலவழித்து ஆட்சியை பிடிக்க அப்படி என்ன அவசரம் ஜோசப் விஜய்க்கு? சொந்த பணம் இவ்வளவை இந்த அரசியல் சூதுக்கு செலவழிக்கும் அளவுக்கு ஒன்றும் அப்பாவி இல்லை அப்படி என்றால் யாருடைய பணம் இப்படி செலவு செய்து ஆட்சி பிடித்து நாணயமாக ஊழல் இன்றி எப்படி ஆட்சி செய்ய முடியும் ? ஆக மக்களுக்கு நல்லது செய்ய ஆட்சி என்று நம்ப முடியவில்லை


அருண், சென்னை
பிப் 11, 2025 08:09

1000 கோடி டீலா இருக்கும், 500 கோடி த.வெ.காவுக்கு, 500 கோடி PK-வுக்கு, சூடாலின் பிளானா இருக்கும், ஆக BJP தமிழ்நாட்டில் வரவே கூடாது... சரியா


amicos
பிப் 11, 2025 04:26

pussy வரலையா


Bye Pass
பிப் 11, 2025 03:40

சாணக்கியன் அவா தான் ...அவளால் ஆள முடியாது ஆனால் ஆள விரும்புபவன் பாவாடையா இருந்தாலும் இவன் தயவை தேடுவது நிதர்சனமான உண்மை ..


RG GHM
பிப் 10, 2025 22:47

avar அவரது மாநிலத்தில் வெற்றி பெற முடிய வில்லை .


Oviya Vijay
பிப் 10, 2025 22:03

இதுவரை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக இந்த மாதிரி யாராவது ஒருத்தர் வந்து ஏதாவது நல்லது பண்ண மாட்டாங்களா அப்படின்னு மட்டும் எதிர்பார்க்கத் தெரியுது... ஆனா அப்படி ஒரு ஆள் வந்தா மட்டும் அவர வெச்சு செய்யுறது... அப்படித் தான... ஒரு வாய்ப்பு தான் கொடுத்துப் பார்ப்போமே அப்படின்னு கொஞ்சமும் யோசிக்குற புத்தியே இல்லை... ஆனா எந்த ஆட்சி வந்தாலும் குறை சொல்ல மட்டும் தெரியும். அப்படியே பழகிப் போச்சுல்ல... எப்போயா திருந்த போறீங்க... என்னத்த சொல்ல... ஆனா ஒன்னு மட்டும் உறுதி. 2026 தேர்தல்ல தமிழ்நாட்டுல பிஜேபி, அதிமுக, பா.ம.க, தேமுதிக, நாதக மற்றும் சில துக்கடா கட்சிகளுக்கு தமிழக மக்கள் சமாதி கட்டிருவாங்க... அதிலும் சங்கிகளுக்கு என்றைக்குமே தமிழ்நாட்டுல ஆட்சி அதிகாரத்துல உக்கார அனுமதிக்க மாட்டாங்க... மத்தி (டெல்லி) யில இருந்துகிட்டு தமிழ்நாட்டை ஆன்னு வாயை பிளந்துகிட்டு எப்படி தமிழ்நாட்டுல மட்டும் நம்மோட பாச்சா பலிக்க மாட்டேங்குது அப்படின்னு நெனச்சு பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்...


V வைகுண்டேஸ்வரன்
பிப் 10, 2025 21:58

இவரை தேர்தல் வியூக வேலைக்கு முதலில் காண்ட்ராக்ட் குடுத்தது பாஜக. இந்த நிஜத்தை வசதியாக மறைத்து விட்டு எழுதுகிறீர்கள். இவரை திமுக காண்ட்ராக்ட் க்கு எடுத்த போது, "வெற்றி பெற மட்டும் பிஹாரி ப்ராமணன் தேவையா?" என்று எழுதினீர்கள். ஒருவேளை பாஜக இவரை அழைத்தும், இவரு அந்த அழைப்பை நிராகரித்து விட்டு விஜய் கிட்ட போகிறார் போலிருக்கிறது. அதனால் இவரை திட்டிகிறீர்கள். இதுவே இவர் இப்போ அண்ணாமலையை சந்தித்திருந்தால்.. ஆஹா.. பாஜக வெற்றி உறுதி என்று எழுதியிருப்பீர்களோ??


venugopal
பிப் 11, 2025 07:48

பாவம் அவா இன்றி அணுவும் அசையாது. உன் சந்ததியினருக்கு சொல்லி வை. காலம் பூராவும் முட்டு தான் குடுக்கணும்


Anbuselvan
பிப் 10, 2025 21:11

அவர் என்ன சொல்றது? நாங்களே சொல்வோம். அதிமுக வுடன் கூட்டணி வைத்து கொண்டால், 2026 இல் ஆட்சியில் பங்கேற்கலாம்.


தமிழ்வேள்
பிப் 10, 2025 20:39

ஜோசஃப் விஜய்க்கு அவர் சார்ந்துள்ள சர்ச் மற்றும் போட்டி/ சகோதர சர்ச் உறுப்பினர்கள் ஓட்டு கணிசமாக வருமா என்பதே பெரிய சந்தேகம்.. பிஹாரிக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்து சோசப்பு வகையறா திருவோடு ஏந்தி தெருவோடு போகும் அம்சம் கூடிய சீக்கிரம் வரும்.....புஸ்ஸி ஆதவ் நிர்மல் வகையறாக்கள் சோசப்பின் ஒட்டு மொத்த சம்பாத்தியத்தையும் உருவி ஒன்றுமில்லாமல் ஆக்கி விடப் போகிறார்கள்..


சமீபத்திய செய்தி