உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெகவை கண்டு பயத்தின் உச்சத்தில் உள்ளது திமுக அரசு: நடிகர் விஜய்

தவெகவை கண்டு பயத்தின் உச்சத்தில் உள்ளது திமுக அரசு: நடிகர் விஜய்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் திமுக அரசு இருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கூறி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.தேர்தல் பிரசார பயணம் என்பது, அனைத்துக்கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் ஆனந்த் மற்றும் கட்சியினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு நடிகர் விஜய் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

நிக்கோல்தாம்சன்
செப் 09, 2025 21:03

மக்கள் செல்வாக்கிருந்த விஜய்காந்தையே கவுத்து விட்டாங்க , நீங்க ? வைட் அண்ட் சி


venugopal s
செப் 09, 2025 20:43

ஒரு ஆக்க்ஷன் ஹீரோ காமெடி அரசியல்வாதியாக மாறி விட்டாரே!


tamilan
செப் 09, 2025 17:32

இந்த ஆள் வாங்குன காசுக்கு மேல கூவுறார்


HoneyBee
செப் 09, 2025 17:29

இவரை பார்த்து தான் இப்போது நேபாளத்தில் ஆட்சியே மாறியது என்று சொல்லாத வரை சரி


Sivasankaran Kannan
செப் 09, 2025 16:27

த வெ க வை கண்டு உலகமே பயந்து நடுங்குகிறது.. டிரம்ப் மற்றும் மற்ற உலக தலைவர்கள் நடுங்குகிறார்கள்.


vadivelu
செப் 09, 2025 16:22

அவங்க ஏன் பயப்படணும். அவங்களுடைய வெற்றியை கொண்டாடத்தானே தவேக தேர்தலில் போட்டி போட போவுது. தவேக வாக்குகள் எல்லாம் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் என்பது மக்கள் அறிவார்கள். காசுக்கும் ஒரு அந்நிய கொள்கைக்கும் விசுவாசம் இருப்பது ஊரறியும்


ராமகிருஷ்ணன்
செப் 09, 2025 16:01

திமுக சென்ற முறை நிறைய இடங்களில் மிக குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் இப்போது அதிமுக, பி ஜே பி கூட்டணி, விஜய் கட்சியினால் ஓட்டுக்கள் எப்படி சிதறும் என்று புரியாமல், மகளீர் உரிமை தொகையை கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டு வருகிறது.


ராஜ்
செப் 09, 2025 22:36

தி மு க எதிர்ப்பு நடுநிலை ஓட்டு எதிர் பக்கம் போகாமல் தடுக்கவே டிவிகே தொடங்கப் பட்டது


xxxx
செப் 09, 2025 15:52

ஸ் ஸ் .... யா ப்பா... முடியல ... சீக்கிரம் ஏலெக்ஷன் வச்சி முடிங்கப்பா ... எல்லாரும் குவிக்கினே இருகாங்க


ராம் சென்னை
செப் 09, 2025 14:29

தினமும் ஒரு அறிக்கை. இது தமிழ்நாடு அரசியலில் புதிதுல்லை.


R.MURALIKRISHNAN
செப் 09, 2025 14:05

அப்ப உன் கட்சியின் காமடி பேச்சாளரும் நீரே தானா? தலைப்பு விட்டில் பூச்சியின் வீரவசனம்னு போட்டிருக்கலாம். நீ மொதல்ல பனையூர் பங்களாவை விட்டு வெளியே வாப்பா. வெளியே எல்லாரும் இருக்கோம். யாருக்கு பயம்னு பார்க்கலாம்


முக்கிய வீடியோ